முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின்பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில்உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை, செங்கல்பட்டுமற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறுபகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதிமுதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுமற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரைதுரிதமாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்குஉத்தரவிட்டார். மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக இன்று (13.11.2021) கடலூர்மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம்ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ளவெள்ளப் பாதிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டுஆய்வு செய்தார். மேலும், 18 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகட்டுவதற்கு தலா ரூ.2,10,000/-க்கான ஆணை மற்றும் நிவாரண உதவிகளைவழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஆடூர்அகரம் பகுதியில் கனமழையால்பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்தவிவரங்களை கேட்டறிந்தார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளாக கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்குதலா ரூ.30,000/- கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000/-, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100/-, என மொத்தம்10 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத்தொகைகளை வழங்கினார்.
பின்னர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில்கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள்குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களையும், வெள்ளப்பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டம், கேசவன்பாளையம் மீனவர்கள் வாழும்சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டகுடியிருப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, வெள்ளப்பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, நிவாரண உதவிகளைவழங்கினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமுகாமையினை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும்சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.