சென்னை, அடையார், காந்திநகரில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவர் 2014 ஆம் வருடம் மத்திய அரசு பணியில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருநாவுக்கரசு கடந்த (30.10.2021) அன்று இரவு மேற்படி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்தவேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டு (01.11.2021) அன்று காலை தனது வீட்டிற்குவந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றதுதெரியவந்தது. இது குறித்து திருநாவுக்கரசு, J-2 அடையார் காவல் நிலையத்தில் கொடுத்தபுகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. J-2 அடையார் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, தீவிர விசாரணை செய்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி தங்க நகைகளை திருடிச் சென்ற 1.ரவிபாபு, ஆ/வ-47, த/பெ.மாலக்கொண்டயன், L.B ரோடு, எண்.70/64, மருதீஸ்வரர் நகர், திருவான்மியூர், சென்னை, 2.சக்குபாய், பெ/வ- 50, க/பெ.சீனிவாசன், எண்.246, “D” பிளாக், கோட்டூர்புரம், சென்னை ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 61 சவரன்தங்க நகைகள் மீட்கப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண்மணி சக்குபாய் என்பவர் மேற்படிபுகார்தாரரின் வீட்டில், வீட்டுவேலைகளை செய்து வந்ததும், புகார்தாரர் வெளியூருக்கு செல்வதுதெரிந்து அவருக்கு தெரிந்த நபரான ரவிபாபு என்பவருடன் சேர்ந்து மேற்படி தங்கநகைகளைதிருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.