தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த02.11.2021 அன்று தலைமைச்செயலகத்தில் பணியிலிருந்த N-3 முத்தியால்பேட்டைபோக்குவரத்து தலைமைக்காவலர். கவிதா, த.கா.27681 என்பவர் மழையின் காரணமாக வேரோடு சரிந்த மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். மேலும் அருகில்பணியிலிருந்த H-1 வண்ணாரப்பேட்டை தலைமைக்காவலர் திரு.K.முருகன்என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேற்படி பெண்தலைமைக்காவலர் கவிதா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொதுநிவாரணநிதியிலிருந்து ரூ.25 லட்சமும், காயமடைந்த தலைமைக்காவலர் திரு.K.முருகனுக்கு ரூ.5 லட்சமும் வழங்க தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் கடந்த 2020ஆண்டு சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்தபோது, உடல்நலக் குறைவு மற்றும்சாலை விபத்துக்களில் இறந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு,முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கி ஒப்புதல்பெறப்பட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 13.11.2021 அன்று மதியம், காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மேற்படி பணியிலிருந்த போது இறந்த தலைமைக்காவலர் J.கவிதா குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சத்திற்கான வரையோலையையும், காயமடைந்த தலைமைக்காவலர் திரு.K.முருகன்குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்திற்கான வரையோலையையும் வழங்கினார். சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்தபோது, உடல்நலக் குறைவு மற்றும் சாலைவிபத்துக்களில் இறந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினரிடம்,முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.3 லட்சத்திற்கான வரைவோலைகளையும் வழங்கினார்.
மேலும் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயர்மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்குசெலவழித்த தொகை பரிசீலனைக்குப் பின்னர் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து(Tamilnadu Police Benevolent Fund – TNPBF) அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில், சமீபத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று, மேற்படி மருத்துவ உதவி தொகைக்குவிண்ணப்பித்திருந்த 27 காவல் ஆளிநர்ளுக்கு மருத்துவ உதவித்தொகைக்கான காசோலைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் வழங்கினார். இன்று வழங்கப்பட்ட 27 காவல் ஆளிநர்களின்மருத்துவ உதவித் தொகை மொத்தம் ரூ.32,93,288/- ஆகும்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்(தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர்(தலைமையிடம்) திருமதி.B.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்திரு.பாலாஜி சரவணன், (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.