கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக, 29.11.2021 அன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டபேப்பர் மில்ஸ் சாலை, தீட்டி தோட்டம் 4வது தெரு மற்றும் ராஜன் நகரில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, சிகிச்சை பெறவந்த மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினார். தொடர்ந்து, கிருஷ்ணா நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிவாரண உதவிகளை வழங்கி, அப்பகுதி குடியிருப்பு சங்கங்களின் சார்பில்

அமைக்கப்பட்டுள்ள 27 கண்காணிப்புக் கேமராக்களின் (CCTV) இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர், குமரன் நகர், உண்ணாமலை தெரு, ஸ்ரீநகர் காலனி, பூம்புகார் நகர் ஆகிய இடங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து ரெட்டேரி, அம்பேத்கர் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களே நேரடியாக மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருவது மனநிறைவை அளிப்பதாகவும், சிறந்த முறையில் ஆட்சி நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்கள். பின்னர், தணிகாச்சலம் கால்வாயில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர்வரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். மேலும், சாந்தி நகர், துர்கா காலனி மற்றும் நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.   மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், பெருநகர சென்னை மாநகராட்சிககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் / கண்காணிப்பு அலுவலர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.