பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்புமற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்மேற்படி 2 பல்நோக்கு விழிப்புணர்வு வாகனங்கள் சென்னை பெருநகரகாவல்துறைக்கு வழங்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில்உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் பெண்கள்மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடவாமல் தடுக்கும்வகையில், கல்லூரிகள், பள்ளிகள், பெண்கள் பணிபுரியும் இடங்கள், மக்கள்அதிகளவு கூடும் மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள், இரயில்நிலையங்கள், வணிக வளாகங்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் கடற்கரைபகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு, குற்றதடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டதுஅதன்பேரில், இன்று (06.12.2021) முதல், சென்னை பெருநகரில்மேற்குறிப்பிட்ட இடங்களில், தினந்தோறும் ஒவ்வொரு இடத்தில் இவ்வாகனங்கள்நிறுத்தி வைக்கப்பட்டு, விழிப்புணர்வு குறும்படங்கள், வாசகங்கள் திரையிட்டுகாண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.