டில்லிபாபு வழங்கும், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியபோது, “ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதற்கு காரணம் டில்லி சார் மற்றும் சக்தி சாரும் தான் காரணம். ஒரு படத்திற்கு இது தான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள் தான். இந்தப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப்படம் 3 வது வாரம் கடந்து அதற்கான ரசிகர்களை சேர்ந்துள்ளது. நீங்கள் தந்த அறிவுரைக்கும் விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துக்களில் தான் நாங்கள் எங்களை திருத்திக்கொள்கிறோம். பேச்சிலர் பெரிய பாதிப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இந்நிகழ்வில்…நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது… என்னுடன் நடித்த கலைஞர்கள் எல்லோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இயக்குநர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள் கேமராவால் நாங்கள் ஃபாலோ செய்கிறோம் என்றார். இந்தப்படத்திற்கு தான் அதிக நாள் டப்பிங் செய்துள்ளேன். இந்தபடம் புது அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பேசியதாவது…ரொம்ப முக்கியமான மேடை, சதீஷ் உடைய கனவு நிறைவேறியிருக்கிறது. அவனது கனவை நனவாக்கிய டில்லிபாபு சாருக்கு நன்றி. இந்தகதையை ஒகே செய்த ஜீவி சாருக்கு நன்றி. இதை திரையில் அழகாக கொண்டு வந்திருந்தார். தியேட்டருக்கு கொண்டு சேர்த்த சக்தி சாருக்கு நன்றி படத்தை வெற்றி பெற வைத்த எல்லோருக்கும் நன்றி. நடிகர் பக்ஸ் பேசியதாவது… இந்தப்படத்திற்கு கிடைத்த இவ்வளவு ஆதரவு எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு தந்ததற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. என்னை ஆச்சர்யப்படுத்தியவர் ஷான் தான் வழக்கமான முறையில் இந்தப்படத்தை எடுக்கவில்லை படம் எடுக்கும் போது இதை எப்படி எடிட் செய்வார்கள் என தோன்றியது. ஆனால் லோகேஷ் எடிட்டிங்கும், சித்துவின் மியூசிக்கும் தான் படத்தை இவ்வளவு உணர்வுப்பூர்வமாக கொண்டுவந்துள்ளது அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி. நடன அமைப்பாளர் அசார் பேசியதாவது…ஜீவி சார் என்னிடம் ஏதோ இருக்கிறது என சொல்லிக்கொண்டே இருப்பார், எனக்கு ஊக்கம் தந்த அவருக்கு நன்றி. இயக்குநர் முதலில் சொன்ன போது அந்த டான்ஸை திரையில் கொண்டு வருவது கஷ்டம் என்றேன். ஆனால் அதை உடனிருந்து வெளிக்கொண்டு வந்தார். எங்கள் பாடல்கள் இன்னும் டிரெண்டிங்கில் இருக்கிறது. படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி. டில்லி பாபு சாருக்கு நன்றி.
இசையமைப்பாளர் சித்துகுமார் பேசியதாவது… என்னை நம்பிய தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. கடைசியாக தான் வந்து படத்தில் இணைந்தேன். நான் வரும் முன்னரே நல்ல பாடல்களை தந்திருந்தார்கள். அதிலிருந்து மாறுபட்டு பின்னணி இசையை உருவாக்கினேன், அதை பாராட்டிய அனைவருக்கும், என்னுடன் உழைத்த கலைஞர்களுக்கும் நன்றி. Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பேசியதாவது… உழைப்பை அங்கீகாரம் செய்வது, அனைவராலும் செய்ய முடியாது, நல்லா உழைப்பவர்களால் மட்டுமே தான் அது முடியும். ஒரு தயாரிப்பாளராக அனைவரையும் இங்கு கூட்டி, எல்லோரையும் பாராட்டுகிறார். மிகச்சிறந்த தயாரிப்பாளர் டில்லிபாபு. அவர் ஒரு படைப்பை எமோஷனலாக கனக்ட் ஆகி செய்வார். அவர் மாதிரியான தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பேச்சிலர், ராக்கி இரண்டையும் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, தமிழின் சிறந்த படங்களை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். தம்பி சதீஷ் ஒரு மிகச்சிறந்த கலைஞன். கதை சொல்லலே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஜீவி சாரின் மூணு முக்கியமான வெற்றிப்படங்களில் நான் இருந்துள்ளேன் என்பது எனக்கு பெருமை. ஒரு விசயத்தை எடுத்துகொண்டால் வெறி கொண்டு உழைப்பவர் அவர். இந்த கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடன் பயணித்தது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் தந்த ஊக்கங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் மிக்க நன்றி
Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு பேசியதாவது…
இந்தப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியவர்களுக்கு நன்றி சொல்ல மட்டுமே இவ்விழா. இயக்குநர் தொடங்கி இதில் உழைத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி அவர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி. சில அறிவுரை சொல்லியுள்ளீர்கள் அதை கேட்டு கொள்கிறோம். இப்படத்தை தமிழகமெங்கும் ஓடி, வெற்றிப்படமாக மாற்றிய Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் அவர்களுக்கும் நன்றி. சஞ்சய் வர்தா சாருக்கும் நன்றி. எங்கள் நாயகன் ஜீவி பிரகாஷுக்கு நன்றி படமெடுக்கும் போதும், எடுத்த பிறகும் மிகுந்த ஆதரவாக இருந்தார். அவரது வெற்றிப்பயணம் தொடர வேண்டும் அனைவருக்கும் நன்றி நடிகை திவ்யபாரதி பேசியதாவது… சுப்பு பாத்திரத்தை எனக்கு தந்ததற்காக சதீஷ்க்கு முதலில் நன்றி. படம் வந்த நாளிலிருந்து வரும் பாராட்டுக்கள் நிம்மதியான தூக்கத்தை தந்துள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் தந்த விமர்சனங்களுக்கு நன்றி. ஜீவி சார் பெரிய இடத்தை தந்து, ஆதரவு தந்ததற்கு நன்றி. சித்து அருமையான இசையை தந்துள்ளார். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி. இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசியதாவது…இந்த வெற்றி டில்லிசாருக்கு தான் சென்று சேர வேண்டும், அவர் தான் இப்படத்திற்கு முழுக்காரணம். நான் இந்தப் பயணத்தில் நிறைய பேரை காயப்படுத்தியிருக்கிறேன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெரும் கூட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இரவு பகலாக இப்படத்தில் உழைத்திருகிறோம். நிஜத்திற்கு அருகில் டிசைன்ஸ் செய்து தந்த கோபி அண்ணாவுக்கு நன்றி. ஜீவி சார் பச்சிளம் பாடலை அவர் தான் செய்தார். சித்து இந்தப்படத்திற்கு 13 நாள் தூங்காமல் வேலை செய்தார் அவர் இல்லாவிட்டால் இன்னும் ஒரு மாதம் லேட் ஆகியிருக்கும். பக்ஸ் அண்ணா நிஜத்திலும் அண்ணா தான் அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. பேச்சிலர் பசங்க அனைவருக்கும் நன்றி. திவ்யாவுக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு வரும் பாராட்டுக்கள் லோகேஷ்க்கும், ஈஸ்வருக்கும் உரித்தானது. அவர்களுக்கு நன்றி. சக்தி அண்ணா எங்கள் மேல் வைத்த நம்பிக்கை பெரிது. அதற்கு நன்றி. ஒரு கதை எப்படி வேண்டுமானலும் எழுதி விடலாம், ஆனால் அதை நம்பிய ஜீவி சார் மனசு தான் இந்தப்படம் உருவாக காரணம் அதற்கு அவருக்கு நன்றி. இப்படிபட்ட ஒரு பாத்திரத்தை செய்வதில் அவர் காட்டிய நுணுக்கம் பிரமிப்பானது. டில்லி சார் இல்லாமல் இந்தப்படம் நடக்க 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை அவருக்கு பெரிய நன்றி.