இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் 13.10.2019 அன்று நடைபெற்ற சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவா ரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கூறியதாவது. அனைத்து மக்களுக்கும் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்காக தீயணைப்புத் துறை சார்பாக செயல் முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த நிகழ்வில் முதல் நிலை பொறுப்பாளர்கள் நமது 400 வருவாய் கிராமங்களிலும் தலா 10 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் எனது பாராட்டினை தொpவித்துக் கொள்கின்றேன். மேலும் சமூக பொறுப்புணர்வுடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத் தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது சிறப்பான உத்தர வின்படி பேரிடர் காலங்களின்போது மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தயார் நிலையில் உள்ளது. அவை பல குழுக்களாக செயல்படு கின்றன. வருவாய்த்துறை காவல்துறை தீயணைப்புத்துறை பொது சுகாதாரத்துறை நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை தமிழ்நாடு மின்சார வாரியம் உட்பட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கும். ஆனாலும் பேரிடர் காலங்க ளில் பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து பதற்றமடைந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்று அறியாத காரணத்தால் விபத்தின் விளைவுகள் அதிகமாக வாய்ப்பு இருக்கும். ஆகையால் இதுபோன்ற செயல்முறை விளக்கங்களினால் மக்கள் தங்களை எப்படி பாதுகாத் துக் கொள்ள வேண்டும். எந்த மாதிhpயான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறை அலுவலர்கள் மூலமாக இந்த நிகழ்வின் வாயிலாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுபோன்று ஒவ்வொரு துறை வாhpயாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து தயார் நிலையில் உள்ளது என கூறினார்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சி.முத்துமாரி வட்டாட்சியர் திருமதி. தமிழ்செல்வி தீயணைப்புத்துறை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள்
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.