தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பவர்களையும் இது போன்ற பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் கூறியுள்ளார். சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவோரை கண்காணிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொதுமக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தன்னை நேரில் அணுகி புகார்களை தரலாம் என்றும் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்