தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகளின் பட்டியலை கட்சியின் மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் தொகுதியில் 34, 35, 36, 37 ஆகிய வார்டுகளிலும், திரு.வி.கநகர் தொகுதியில் 73, 75, 71 ஆகிய வார்டுகளிலும், கொளத்தூர் தொகுதியில் 68 வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ராயபுரம் தொகுதியில் 48, 49, 50, 51, 52, 53 ஆகிய வார்டுகளிலும், ஆர்.கே.நகர் தொகுதியில் 38, 47 வார்டுகளிலும், திருவொற்றியூர் தொகுதியில் 14 வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது.
மேலும், கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் தொகுதியில் 55, 56, 60 ஆகிய வார்டுகளிலும், எழும்பூர் தொகுதியில் 61வது வார்டிலும், வில்லிவாக்கம் தொகுதியில் 94 வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. அதேபோல் மத்திய சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் 63, 114, 115, 116 ஆகிய வார்டுகளிலும், அண்ணாநகர் தொகுதியில் 105, 107 ஆகிய வார்டுகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், கட்சியின் தென்சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர் தொகுதியில் 160, 161, 163, வேளச்சேரி தொகுதியில் 173, 175, 176, 178, சைதாப்பேட்டை தொகுதியில் 172, சோழிங்கநல்லூர் தொகுதியில் 185, 190, 195, 196, 197, 200 ஆகிய வார்டுகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடிடுகிறது. அதேபோல் தென்சென்னை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் 125 வார்டிலும், விருகம்பாக்கம் தொகுதியில் 128 வது வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், அம்பத்தூர் தொகுதியில் 80, 82, 86, 87, 93 ஆகிய வார்டுகளிலும், மாதவரம் தொகுதியில் 22வது வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.