திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி,பிப்.4 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.இதனைத் தொடர்ந்து,வேட்புமனு பரிசீலினை நேற்று நடைபெற்றது. இந்நிலையில்,திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.அதன்படி,இன்று கோவை,நாளை சேலம்,நாளை மறுநாள் கடலூர் என வருகின்ற 17 ஆம் தேதி வரை காணொலி வாயிலாக முதல்வர் பிரச்சாரம் மேற்கோள்கிறார்.