ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் மத்தியில் பெரும் பேசுபொருளாக அண்மைக்காலங்களில் மாறி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் தமிழர் கட்சி பெற்று மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து நிற்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழரின் வலுவான படைப்பிரிவாக இணையத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பப் பாசறை, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவே கட்சி சார்ந்த நிகழ்வுகளை, கருத்தியல் சார்ந்த விடயங்களை டிவிட்டரில் தொடர்ச்சியாக ஹாஷ்டேக் ட்ரெண்ட்டிங்கில் வலிமையாக இயங்கி வருகிறது. இந்த நகராட்சி தேர்தலுக்கும் மிக வித்தியாசமான பரப்புரை ஒன்றை முதன்முதலாக முன்னெடுக்கிறது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை. இது வாட்ஸ் அப் செயலி மூலம் நேரடியாக பேசும் நிகழ்வாக அமையவிருக்கிறது. மக்கள் மத்தியில் இப்பரப்புரையை முதன் முதலாக எடுத்துச் செல்கிறது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை.