இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 07.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பினர் நேரில் சந்தித்து 2018-19ஆம் ஆண்டில் மக்கள் நலனுக்கான சேவைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பெற்ற மாநில அளவி லான முதன்மை விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டியானது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப. அவர்களை தலைவராகக் கொண்டு அவரது ஆலோசனையின் படி பல்வேறு மக்கள் நலனுக்கான சேவைகளில் ரூடவ்டுபட்டு வருகின்றனர். குறிப்பாக 662 ஆயுட்கால உறுப்பினர்களும் 21 புரவலர்களும் 5 துணைப் புரவலர் களும் உள்ளனர். இதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு போpடர் மேலாண்மைப் பணிகள் இரத்ததான முகாம்கள் நடத்துதல் சாலை பாதுகாப்பு தற்கொலை தடுப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் 15 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 770 யு+னிட் இரத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பேரிடர் மேலா ண்மை மற்றும் முதலுதவி வழங்குதல் தொடர்பாக 6 பயிற்சி முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. பிளாஸ்டிக் ஒழிப்பு சாலை பாதுகாப்பு எhpபொருள் சிக்கனம் போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் 15 விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத் தப்பட்டுள்ளன. இதுதவிர இலவச தாய்-சேய் நல ஊர்தி இலவச அமரர் ஊர்தி மற்றும் அவசரகால ஆம்புலன்ஸ் ஊர்தியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இராம நாதபுரம் மாவட்ட செஞ்சிலுவை சொசைட்டியின் இத்தகைய சிறப்பான செயல் பாடுகளை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும் தமிழ்நாடு மாநில ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் மாநில அளவில் முதலிடத்திற்கான விருதினை 01.11.2019 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். இதனையடுத்து இன்றைய தினம் (07.11.2019) இராமநாதபுரம் மாவட்ட செஞ்சிலுவை சொசைட்டி அமைப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு. கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப.அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவ்விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின்போது ரெட்கிராஸ் துணைத் தலைவர் திரு.ஹாஜி அஸ்மாபாக் அன்வர்தீன் சேர்மன் திரு. எஸ்.ஹாரூன் செயலாளர் திரு.எம்.ராக்லாண்ட் மதுரம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சுந்தரம் ஆகியோர் உடனிருந்தார்கள்