சென்னை பெருநகர காவல் துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதிதாக சென்னை பெருநகர காவல் துறையில் 38 சிறுவர் மற்றும்சிறுமியர் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு மொத்தம் 112 காவல் சிறார் மற்றும்சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , இ.கா.ப. உத்தரவின் பேரில், காவல் இணை ஆணையாளர், மேற்கு மண்டலம் இராஜேஸ்வரி. இ.கா.ப. சென்னை காவலர் சிறார் மற்றும் சிறுமியர்மன்றங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கடந்த 03.08.2021 அன்று நியமிக்கப்பட்டார்.சிறார் மன்றங்கள் சிறப்பாக செயல்பட அதன் உறுப்பினர்களுக்கு விளையாட்டுபோட்டிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள், எழுதுபொருட்கள் வழங்கியதுடன் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், இளவயதுதிருமணம் பற்றிய விழிப்புணர்வை மாநில மனித உரிமைகள் கழகம் அப்பல்லோ மருத்துவமனை, நலம், பி வெல் மருத்துவமனை மற்றும் சர்வதேச நீதி பணிமுகமையுடன் இணைந்து நடத்தப்பட்டது. தற்போது மேற்படி 112 மன்றங்களில்3,626 சிறார்களும் மற்றும் 1.826 சிறுமியர்களும் என மொத்தம் 5452 பேர்உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 10 சதவீதம் உறுப்பினர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கே-8 அரும்பாக்கம் காவல் நிலைய சிறார் மற்றும்சிறுமியர் மன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் பெருநகர சென்னை மாநகராட்சியின்பங்களிப்பு (ரூ.13.5 இலட்சம் ) மற்றும் HCL நிறுவன பங்களிப்பு என மொத்தம்ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.23 இலட்சம்மதிப்பீட்டில் இக்கட்டிடத்திற்கு தேவையான இதர அடிப்படை வசதிகளை சென்னைஅரும்பாக்கத்தைச் சேர்ந்த நல விரும்பிகள் மூலம் செலவிடப்பட்டு சமூகத்தில்பின்தங்கிய மாணவர்கள் தங்களது உயர் படிப்பை தொடரவும், உயர் தொழில் நுட்பகல்லூரிகளில் சேருவதற்கு JEE / NEET போன்ற நுழைவு தேர்வு எழத பயிற்சியும்மற்றும் சீருடை பணியாளர் தேர்வு முகமை, (USRB) தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் (TNPSC), வங்கி தேர்வுகள், (Bank Exam) மத்திய பணியாளர்தேர்வாணையம், (UPSC) இரயில்வே தேர்வாணையம் (Railway Exams) நடத்தும்போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள தேவையான பயிற்சிகளை இம்மையம் மூலம்வழங்குவதுடன், சன் அகடாமி போன்ற இதர பயிற்சி மையங்களிலிருந்தும் சிறப்புபயிற்சியாளர்களை கொண்டு மேலும் சிறப்பாக பயிற்சி அளிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
காவல் சிறார் மற்றும் சிறுமியர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில்கலந்து கொள்ளவும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்கஇடங்களுக்கு செல்லவும், HCL நிறுவனம் ரூ.60 இலட்சம் மதிப்புள்ள பேருந்துவழங்கியுள்ளது. இதில் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி பெட்டி, முதலுதவிபெட்டி, கேமிரா, தண்ணீர் சுத்திகரிப்பு கருவி, மடிக்கணினி, அலைபேசி சார்ஜ்செய்யும் வசதி மற்றும் அனைத்து ஜன்னல்களிலும் அவசர காலத்தில் வெளியேறும்வசதி போன்ற 17 வசதிகள் செய்யப்பட்ட சிறப்புமிக்க இப்பேருந்து சென்னைபெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படிதிட்டங்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.மேற்கண்ட நிகழ்வுகள் இதுவரை சென்னை பெருநகர காவல் துறை வரலாற்றில்இல்லாத ஓர் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
14.04.2022 காலை அரும்பாக்கம் காவல் சிறார் மற்றும் சிறுமியர்மன்றத்தில் நடந்த விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப. அவர்கள் கலந்து கொண்டு காவல் சிறார் மன்ற மாணவமாணவிகளுக்கான வாழ்வு சார் மேம்பாட்டு பயிற்சி மையத்தை (Career Advancement Training Centre) திறந்து வைத்தார். மேலும் சிறப்பு பேருந்தையும்கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், இ.கா.ப, காவல் இணை ஆணையாளர், (மேற்குமண்டலம்), இராஜேஸ்வரி, இ.கா.ப, HCL நிறுவன துணை தலைவர் பாலமுரளிதரன், துணை ஆணையாளர்கள் சிவபிரசாத், இ.கா.ப (அண்ணாநகர்) ஈஸ்வரன், (புளியந்தோப்பு) மற்றும் காவல் சிறார் மற்றும்சிறுமியர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மேற்படி பேருந்து மூலம் 14.04.2022 அன்று 25 சிறுவர் மற்றும்சிறுமியர் எழும்பூரில் உள்ள மாநில காவல் அருங்காட்சியகத்தை பார்வையிடஅழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.