பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ராம்கோபால் வர்மா மற்றும் இஷா கோபிகர் மீண்டும் ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, MX அசல் தொடரான “தகனம்” தொடரில் இணைந்துள்ளனர். டிரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த தொடர், தற்போது ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகியுள்ள தொடர்களில் ஒன்றாகும். இந்த MX ஒரிஜினல் தொடரில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகச்சிறப்பான நிஜ வாழ்க்கை சித்தரிப்புகள் மற்றும் வலுவான அழுத்தமான உள்ளடக்கத்திற்காக அனைவராலும் விரும்பப்படும் இயக்குநர் ராம்கோபால் வர்மா, பார்வையாளர்களை எப்போதும் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் பரபர விறுவிறு கதைகளை தருவதில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பல திரைப்படங்களில் ஒன்றாகப் பணியாற்றிய வர்மாவும் இஷா கோபிகரும் மீண்டும் இணைந்து, பணியாற்றுவதன் மூலம் ‘தகனம்’ தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.
இஷா கோபிகர் நீண்ட இடைவேளைக்பிறகு மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரியாக இந்த தொடரில் அவதாரம் எடுத்துள்ளார். அவரது கதாபாத்திரமான அஞ்சனா சின்ஹா கடினமாக உழைத்து, க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவருகிறார், மேலும் அவர் இத்தொடரின் சூத்திரதாரராகவும் இருக்கிறார்.
பவானி வேடத்தில் நடிக்கும் நடிகை நைனா கங்குலி, பல பெங்காலி மற்றும் தென்னிந்திய படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் தகனம் தொடரில் பழிவாங்கும் நக்சலைட் வேடத்தில், பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திறமையின் வடிவமாக விளங்கும் நடிகர் அபிஷேக் துஹான், தகனத்தில் ‘ஹரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நிச்சயமாக தனது திறமைமிகு நடிப்பால் பார்வையாளர்களால் கவனிக்கப்படுவார். தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் அபிலாஷ் சவுத்ரி, அவரது நிஜ வாழ்க்கை ஆளுமைக்கு முற்றிலும் எதிரான ஒரு அதிரடியான நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே, தகனம் தொடரில் சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இந்த தொடரை பற்றி தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா பேசுகையில்…, “எனது முதல் OTT தொடரான “தகனம்” தொடரை MX Player, உடன் இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மகாத்மா காந்தி சொன்ன ‘கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்’, மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ‘பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி’ என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. தகனம் வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உங்களை உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. இந்த தொடருக்காக, கதையின் வன்முறைகளை நிகழ்த்திக்காட்டும் இத்தொடரின் கதைக்கு நியாயம் செய்யும், தீவிரமான மெத்தட் ஆக்டிங் நடிகர்களை தேடிதேடி தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த தொடருக்கு பார்வையாளர்கள் தரும் வரவேற்பை காண எங்கள் குழு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது.
மிக தைரியமான மற்றும் ஆற்றல்மிக்க போலீஸ் அவதாரம் குறித்து கருத்து தெரிவித்த இஷா கோபிகர் கூறுகையில்.., “திரையில் இந்த சீருடை அணிய முடிந்ததை பெருமையாக உணர்கிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் நம்பிக்கையுடன் கிடைத்துள்ளது. இந்த சீருடையில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் அயராது வேலை செய்கிறார்கள் மற்றும் ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறார்கள், இதனால் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் இருக்க முடிகிறது. அவர்கள் உழைத்த அனைத்து கடின உழைப்பையும் நான் பாராட்டுகிறேன், அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் மற்றும் அவர்களை திரையில் சித்தரிக்க முடிந்தது எனக்கு பெருமை. கடினமாக உழைத்து, க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவரும் பாத்திரத்தில் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த பாத்திரம் உண்மையில் ஒரு நடிகராகவும் பெண்ணாகவும் என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தியது மற்றும் ராம்கோபால் வர்மாவின் உருவாக்கத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகை நைனா கங்குலி கூறுகையில், “ராம்கோபால் வர்மா சாருடன் இணைந்து பணிபுரிவது எப்போதுமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடரில் அவரது அறிவுரைகள் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. தகனம் எனது வழிகாட்டியுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான மற்றொரு அருமையான வாய்ப்பு. தகனம் தொடரில் நான் நடித்த கேரக்டர் இதுவரை இல்லாத அளவு எனக்கு சவாலான கேரக்டர். பார்வையாளர்கள் என்னமாதிரி எதிர்வினையை தரப்போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நடிகர் அபிஷேக் துஹான் கூறுகையில்.., “எனது கதாபாத்திரம் ‘ஹரி’ ஒரு கிளர்ச்சியாளர் (நக்சலைட்) பாத்திரம், அவர் தனது தந்தையின் கொலையாளியைத் தேடுகிறார். இந்தத் தொடரில், அப்பாவை கொலைசெய்தவர்களை பழிவாங்குவது மட்டுமின்றி, ஆளில்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த முழு பயணமும் ஒரு அழகான அனுபவமாக இருந்தது, பார்வையாளர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். இந்த அற்புத அனுபவத்தை சாத்தியமாக்கிய முழு குழுவிற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
நடிகர் அபிலாஷ் சவுத்ரி பேசுகையில்,
‘தகனம்’ தொடரின் வெளியீட்டில் ஆவலாக உள்ளேன். ராம்கோபால் வர்மா சாரின் ப்ராஜெக்ட்டுகளில் முன்பு பணியாற்றியிருக்கிறேன். அவருடன் பணிபுரிந்த அனுபவம் எப்பொழுதும் இனிமையாக இருந்து வந்துள்ளது. தகனம் தொடரின் வெளியீட்டையும் பார்வையாளர்களின் எதிர்வினையையும் காண ஆவலாக உள்ளேன்.
நடிகர் சாயாஜி ஷிண்டே கூறும்போது,
முன்பு ராம்கோபால் வர்மாவுடன் பணியாற்றி இருப்பதால், அவர் தனது கதைகளின் உள்ளடக்கத்தில் சேர்க்கும் த்ரில் வேறு எதற்கும் இல்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவரிடமிருந்து வேலை செய்வதும் கற்றுக்கொள்வதும் எப்போதும் ஒரு வளமான அனுபவம். தகனம் படத்தில் சென்னா ரெட்டியாக நடித்துள்ளேன். தகனம் தொடரில், என் கதாபாத்திரம் மிகவும் உண்மையானது. பார்வையாளர்கள் எனது நடிப்பை பாராட்டுவார்கள் மற்றும் தொடரைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.
தகனம் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர், தன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கும் ஒரு மகன். பழிவாங்குதல், இரத்தக்களரி மற்றும் ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த தொடரை ராம்கோபால் வர்மா தயாரிக்க அகஸ்தியா மஞ்சு இயக்கியுள்ளார். இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அஸ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண், சாயாஜி ஷிண்டே, அபிலாஷ் சவுத்ரி, பிரதீப் ராவத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தி மற்றும் தமிழிலும் டப் செய்யப்படுகிறது. இந்தி: https://bit.ly/Dhahanam_HindiTrailer 14 ஏப்ரல் 2022 முதல் MX Player இல் பிரத்தியேகமாக அனைத்து அத்தியாயங்களையும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யுங்கள்
Web: https://www.mxplayer.in/
எங்களுடன் இணைந்திருக்க:
www.facebook.com/mxplayer
www.twitter.com/mxplayer
www.instagram.com/mxplayer
MX மீடியா ஆண்ட்ராய்டில் 1Bn+ ஆப்ஸ் பதிவிறக்கங்கள், உலகளவில் 300Mn MAUகள் மற்றும் 10 மொழிகளில் 200,000 மணிநேர உள்ளடக்கத்துடன் MX Media இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு சூழலை உருவாக்கியுள்ளது. MX Media MX Player – இந்தியாவின் #1 OTT, அத்துடன் MX கேம்கள், MX இசை மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. MX பிளேயர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட MX ஒரிஜினல்/ பிரத்தியேகங்கள், திரைப்படங்கள், வலைத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஒன்பிளஸ் டிவி ஆகியவற்றில் இந்த பயன்பாடு கிடைக்கிறது.
MX Player பற்றி
MX ப்ளேயர் இன்று இந்தியாவின் மிகப்பெரிய வளர்ந்து வரும் OTT தளமாகும் இந்தியா மட்டுமல்லாமல் அத்துடன் UAE, US, கனடா, UK, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவுகள் உட்பட 17+ சந்தைகளில் உலகளாவிய அளவில் பெரிய OTT தளமாக விளங்குகிறது. இது தற்போது விளம்பர ஆதரவு மாதிரியில் இயங்குகிறது மற்றும் பார்வையாளர்களின் நாடித் துடிப்பை நன்கு புரிந்து கொண்டு, சமீபத்தில் பௌகால், ஆஷ்ரம், மத்ஸ்ய காந்த், ஹை, சமந்தர் மற்றும் கேம்பஸ் டைரிஸ் போன்ற வகைகளில் பல சாதனை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. வீடியோ ஸ்ட்ரீமிங் டேட்டா நுகர்வை பாதியாகக் குறைக்கும் H.266 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரே OTT இயங்குதளம் இதுவாகும். App Annie State of Mobile Report 2022 இன் படி – வீடியோ ஸ்ட்ரீமிங்கில் உள்ள பதிவிறக்கங்களின் அடிப்படையில் MX Player இந்தியாவில் #2 மற்றும் உலகளவில் #6 வது இடத்தில் உள்ளது.