இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்டதிட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டபணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைஅமைச்சர் ஏ.நாராயணசுவாமி தலைமையில் 19-04-2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய சமூகநீதிமற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்திரு.ஏ.நாராயணசுவாமி தெரிவிக்கையில்:
இந்தியாவில் 117 மாவட்டங்கள் முன்னேற விளையும்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்இத்திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்ட பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம்மாவட்டத்தில் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீர் வளம், திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு குறித்துஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இம்மாவட்டத்தில் சிறுவயதிலேதிருமணம், உப்பு தண்ணீர் மற்றும் பல்வேறு உணவுபழக்கவழக்கங்களால் கடற்கரைப் பகுதிகளில்பொதுமக்களிடையே இரத்தசோகை காணப்படுகிறது. இரத்தசோகை, சிறுவயது திருமணம் உள்ளிட்டவற்றைதடுப்பதற்காக பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் மட்டும் நடத்தாமல் பாதிக்கப்பட்டவர்களிடம் பல்வேறு அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கியகுழுக்கள் நேரிடையாக சென்று விழிப்புணர்வு செய்யவேண்டும். காசநோய் ஆரம்ப காலத்திலே கண்டறிவதன் மூலம்குணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் ஆரம்பகாலத்தில் கண்டறிவதற்கான முறைகளை கடைபிடிக்கவேண்டும். கல்வியில் பள்ளி மாணவர்களின் இடைநீற்றல்குறித்து காரணங்களை கண்டறிய வேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன்கூடிய கழிப்பறைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். எனவே பள்ளிகளில் உள்ள அனைத்து கழிப்பறைவசதிகள் குறித்து ஆய்வு செய்ய இன்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ்சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரத்து வீடுகளுக்கு குடிநீர் திட்டப்பணிகள் நடைமுறைபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுதற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் 90,000 வீடுகளுக்குமட்டுமே குடிநீர் திட்ட பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்குபோதுமான மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இல்லாதது ஒருகாரணம் ஆகும். இராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர்வசதிக்காகவும், பாசன வசதிக்காகவும், நிரந்தர செயல்திட்டத்தினை ஏற்படுத்தி அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்டஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
விவசாய பெருமக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம்குறைந்த விலையில் கடன் வசதி பெறுவதற்கு விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும்பொருட்களை சேமிப்பதற்கு போதுமான சேமிப்புகிடங்குகளை ஏற்படுத்தவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல்வேறு துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிஅளிப்பதன் மூலம் வேலைநாடுநர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்குவழங்கப்படும் கல்வி உதவித் தொகை அனைவருக்கும்சென்றடையும் வகையில் விரைவுப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உடனடியாக பூர்த்திசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவேல மரங்களை அகற்றிவிவசாயம் மேற்கொள்வதற்கான புதிய முன்மொழிவுகள்தேவை. மேலும் மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சித் திட்டபணிகளுக்கான போதுமான நிதி உடனடியாக வழங்கப்படவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் உரப்புளிகிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டுவரும் மாவட்ட நாற்றாங்கால் பண்ணையில் நாற்றாங்கால்அமைக்கும் பணியினையும், அரியனேந்தல்ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்ரூ.14.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளகுறுங்காட்டினையும், அரியனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர் மற்றும் ஏ.டி.காலனியில் ஜல் ஜீவன் மிஷன்திட்டத்தின் கீழ் ரூ.5.15 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்துவீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டஅரியனேந்தல் ஊராட்சி மன்ற அலுவலககட்டடத்தினையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், போகலூர் கிராமத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில்சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும், பொட்டிதட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ள்யின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுஅங்குள்ள மாணவ – மாணவிகளிடம் மாண்புமிகு ஒன்றியசமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்திரு.ஏ.நாராயணசுவாமி அவர்கள் உரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சங்கர்லால் குமாவத்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கே.ஜே.பிரவீன்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர்திரு.ஆ.ம.காமாட்சி கணேசன் அவர்கள் உள்ளிட்டஅனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.