தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் வெளியானது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் திரு உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இயக்கியுள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.