தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (2.5.2022) காலை, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தருமபுரி மாவட்டம், மண்டலச் செயலாளர் கொ.ரமேஷ், இராமநாதபுரம் மாவட்டம், மண்டலச் செயலாளர் பத்மநாபன், தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சே.சதீஸ், சிவகங்கை மாவட்ட முன்னாள் செயலாளர் வேங்கை பிரபாகரன், சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி துணைத் தலைவர் காலித், இராமநாதபுரம் மாவட்டம், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பரமேஷ்வரி, தருமபுரி மாவட்டம், ஒன்றியப் பொறுப்பாளர் திலீபன், இராமநாதபுரம் மாவட்டம், ஒன்றியப் பொறுப்பாளர் ஜெயக்குமார், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளர் த.நிருபன்பாஸ், இராமநாதபுரம் மாவட்டம், புதுவலசை ஊராட்சி முன்னாள் தலைவர் ஜவஹாருல்லா, கடலூர் மாவட்டம், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இயக்குநர் சிவராசன், மதுரை மாவட்டம், தொகுதி பொறுப்பாளர் மகாதேவன், விருதுநகர் மாவட்டம், சுற்றுசூழல் பாசறை செயலாளர் கு.மாதாகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜனார்த்தனன், கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகரச் செயலாளர் முத்துவேல், திட்டக்குடி நகர தலைவர் திட்டக்குடி ரவி, அரியலூர் மாவட்டம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ராஜசேகர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் – தொகுதி செயலாளர் சுரேஷ்குமார் – வீரத்தமிழர் முன்னணி கட்சியைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காளிமுத்தன், கோவை மாவட்டச் செயலாளர் அருண் தீனா – அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம், இளைஞர் அணி துணைச் செயலாளர் பொன்னேரி எச்.காதர் மற்றும் வழக்கறிஞர் அ.மு.ஃபெரோஸ் உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், அயலக அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், எம்.பி., செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.