விவசாயம் செய்து பொருளாதாரத்தில் மேம்பட்டு வரும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால் மற்றவர்கள்அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.  நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை முக்கியப்பங்கு வகிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து உணவு அளிப்பதோடு, வேலை வாய்ப்பளித்தல், தொழில்துறை முன்னேற்றம், பன்னாட்டு வாணிபம், வறுமை ஒழிப்பு எனப்பல்வேறு இனங்களிலும் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுதமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளல் 70 கதவீத மக்களுக்கு வேளாண்மைத் தொழிலேவாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வேளாண்மையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறு மாற்றமும்தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தமிழக அரசு, வேளாண் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறதுகுறைந்த அளவு நில உடைமை, வேளாண் அல்லத இதர பயன்பாட்டிற்குவிளைநிலங்களை மாற்றுதல், கணிக்க இயலாத பருவநிலை, விவசாயத் தொழிலாளர்கள்பற்றாக்குறை, வேளாண் விளை பொருட்களைச் சந்தைப்படுத்துதல் ஆகியவை வேளாண்தொழில் சந்திக்கும் பெரும் சவால்களாகும்எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் தொழிலினை மேம்படுத்தி வேளாண்பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெப்பம், மழையளவு, மண்வளம் ஆகியவற்றிற்கேற்ப பயிர்இரகங்களும், உற்பத்தியை பெருக்கிட நவீன தொழில் நுட்பங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியைருவாக்கிட விவசாயிகளின் நலன் சார்ந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன்கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்என்ற பெரும்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியில் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு உணவு மற்றும்நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும்மீனவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளவாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்துதமிழ்நாட்லுள்ள 12,524 கிராம பஞ்சாயத்துக்களில் ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம்செயல்படுத்தப்படும்கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல், நீர்வளஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர்பாசன முறையினைபின்பற்றுதல், சமுதாய காடுகள் உருவாக்குதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியைபெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன்கள் வழங்குதல், வருவாய் துறையின்மூலம் நிலப்பட்டா மாறுதல் வழங்குதல், நீர்வள ஆதாரத்துறை & ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித்துறைகளின் மூலம் ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்இத்திட்டம் 2021-22ஆம் ஆண்டில் 2,500 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை மற்றும்சகோதரத் துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து மொத்தம் ரூ.1245.45 கோடி ஒன்றியமற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக மாநிலஅரசு கூடுதலாக நிதி ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இராமநாதபுரம்மாவட்டத்தில் முதற்கட்டமாக 61 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்முதன்மை நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண்விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையினைபின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் புதிய பட்டா/ பட்டா மாறுதல் செய்து வழங்குதல், கூட்டுறவுசங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், கால்வாய், பாசன நீர் வழிதடங்களைதூர்வாருதல் போன்ற பணிகள் முக்கிய பணிகளாக உள்ளது.  இத்திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு உணவு மற்றும்நுகர்வோர் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதாரத் துறை, எரிசக்தி துறை, கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்துசெயல்பட்டு வருகிறதுதற்சமயம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண்பண்ணை கருவிகளை வழங்குவதற்கு மாநில நிதியிலிருந்து தமிழக அரசு இராமநாதபுரம்மாவட்டத்திற்கு ரூ.43,09,000/- (ரூபாய் நாற்பத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரம் மட்டும்) நிதிஒதுக்கீடு செய்துள்ளதுஇவற்றில் 61 கிராம பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் 187 வேளாண் கருவிகளின் தொகுப்புவழங்கப்பட உள்ளது. ஒரு தொகுப்பில் தலா 01 எண்கள் கடப்பாறை, மண்வெட்டி, களைகொத்தி, மண்சட்டி மற்றும  2 எண்கள் கதிர் அறுப்பான் போன்ற வேளாண் கருவிகள் உள்ளது. பொதுபிரிவு விவசாயிகளுக்கு 75% மானியத்திலும், பட்டியல் பிரிலு விவசாயிகளுக்கு 90% மானியத்திலும் வழங்கப்படுகிறது. ஒரு தொகுப்பின் முழு விலை ரூ.2297/- ஆகும். மானியத்தில்பொது பிரிவு விவசாயிகளுக்கு ரூ.2193/-ம் பட்டியல் பிரிவு விவசாயிகளுக்கு ரூ.2632/-ம்மானியமாக வழங்கப்படுகிறது.