சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 07.12.2019 அன்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்களிடம், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS என்ற செயலியின் பயன் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். மேலும், இந்த காவலன் SOS செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும் எடுத்து ரைத்ததுடன், பெண்கள் கட்டாயம் இந்த செயலியை தங்களது செல்போனில்
பதிவிறக்கும் செய்து, அவசர தேவையின்போது இந்த செயலி மூலம் காவல்துறையை அழைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின்போது, பெண்கள் உட்பட சுமார் 1,000 பேர் கலந்து கொண்டு தங்களது செல்போனில் காவலன் SOS செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டுனர். மேலும், காவலன் SOS செயலி குறித்து தனது குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும், பணிபுரியும் இடங்களிலும் தெரிவித்து, இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்கிழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணையாளர்
திருமதி.எச்.ஜெயலஷ்மி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.