தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.*********
கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக்கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV
கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.
நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாக இருக்கிறது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’*தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.
கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக்கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV
கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.
நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாக இருக்கிறது.