கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50வது ஆண்டு படைப்பிலக்கிய பயண விழாவும் சிறப்பாக நடைபெற்றன.
கடந்த 29-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடு, பத்திரிகையின் 26வத ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வு மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் கலை இலக்கிய ஊடகப் பயணத்தின் 50வது ஆண்டு நிறைவின் பூரிப்பு ஆகியவற்றை ஒரே மண்டபத்தில் அனுபவிக்கும் நிகழ்வு சிறப்பான காட்சிகளாக விளங்கியது.
கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள ‘மெற்றொபொலிட்டன்’ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த பல நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெறவும் இலங்கைச் சிறப்பிதழ் அதிக பக்கங்களுடனும் வெளிவரவும் பல்வேறு வர்த்தகப் பிரமுகர்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர் என்பது பெருமையுடன் குறிப்பிட வேண்யதொன்றாகும் இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த’ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழாவிற்கு பிரபல பேச்சாளர் திருமதி கோதை அமுதன் மற்றும் ‘வீ;ணைமைந்தன் சண்முகராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.
‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழாவிற்கு பிரதம விருந்தினராக ஈஸ்ட் எப்எம் 102.7 வானொலிி நிலையத்தின் அதிபர் நடா ராஜ்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான திருமதி அண்ணாமலை தமிழரசி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் விசேட விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களும் ஒன்றாரியோ மாகாண அமைச்சர்களில் ஒருவரான றேமன்ட் சோ அவர்களும் நகர சபை உறுப்பினர் திருமதி ஜெனிபர் மெக்கிலீ அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் பிரதம ஆசிரியரை கௌரவி;த்தனர். பல்வேறு சமூக.கலை இலக்கிய அமைப்புக்கள் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை மேடையில் கௌரவித்தன.சுமார் முப்பது அழைக்கப்பெற்ற பேச்சாளர்கள் அங்கு உரையாற்றினார்கள். இடையில் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கடந்த வார உதயன் இதழ் சிறப்பம்சங்களுடன் ‘இலங்கைச் சிறப்பிதழாக’ வெளிவந்தது. இந்த விசேட இதழைப்பற்றிய விமர்சனத்தை வழங்கிய பின்னர் சமூகப் பிரமுகரும் அரசியல் ஆர்வலருமான குயின்றஸ் துரைசிங்கம் அவர்கள் முதற்பிரதியை பிரதம விருந்தினரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆதரவு வழங்கிய வர்த்தக பிரமுகர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் ‘இலங்கைச் சிறப்பிதழின் பிரதிகள் வழங்கப்பெற்றன. கனடாக் கவிஞர்கள் கழகத்தைச் சேர்ந்த முக்கிய கவிஞர்கள் இணைந்து கவிதைகளால் பிரதம ஆசிரியரையும் உதயன் பத்திரிகையையும் வாழ்த்திப் பாடினார்கள்.
இறுதியில் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் பதிலுரை வழங்கினார்