போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடசாலையில் நடத்தப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும், ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல்தடுப்பு தினமாக (International Day Against Drug abuse and Illicit Trafficking)  கடைபிடிக்கப்பட்டு வருவதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், (24.06.2022) காலை, வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்துறைசார்பாக, போதைப் பொருட்களுக்கு திரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் (Banners), சுவரொட்டிகள் (Posters) மற்றும் துண்டு பிரசுரங்கள் (Awareness Pamphlets) வெளியிட்டார்.

மேலும், காவல் ஆணையாளர் உத்தரவுப்படி, மேற்படி வெளியிடப்பட்ட விழிப்புணர்வுபதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கொண்டு, சென்னை பெருநக காவல்துறைசார்பாக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் வைக்கப்பட்டுவிழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டது

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் தலைமையில், 24.06.2022  சென்னை பெருநகரில் உள்ள 47 பள்ளிகள், 6 கல்லூரிகள் மற்றும்  20 பொதுமக்கள் அதிகம்கூடுமிடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுமுகாம்கள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும்தீமைகள், உடல் உபாதைகள், எதிர்கால சீரழிவு குறித்தும், மாணவ சமுதாயம் இது போன்ற கொடியபழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்எனவும், விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் எடுத்துரைத்து பல்வேறு அறிவுரைகள்மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்ப. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.