இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இன்று (27-06-2022) கோரிக்கைமனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வுகாணப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பொதுமக்களிடம் 251 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணசம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்இ.ஆ.ப., அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8பயனாளிகளுக்கு தலா ரூபாய்.5479 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 கண் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளையும் (ஸ்மார்ட் போன் ) மற்றும் 15 நபர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் எனமொத்தம் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,40,100 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.