திருவல்லிக்கேணியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கைது

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள்கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, D-1 திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 28.06.2022 அன்று காலை, , ஜிம்கானா கிளப் எதிரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 4 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததுவிசாரணையில் ஆட்டோவில் வந்த 4 நபர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வடமாநிலத்தில் இருந்து மேற்படி கஞ்சாவை கடத்திக் கொண்டு சென்னை வந்து, சென்டிரல்இரயில் நிலையத்திலிருந்து சவாரியாக ஆட்டோவில் வந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது.  அதன்பேரில், கஞ்சா கடத்தி வந்த 1.இராமகிருஷ்ண சாகு. வ/29, த/பெ.ரமாகாந்த், மசூதிதெரு, சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம், சென்னை,  2.ஜெகன் மோகன் மண்டால், வ/28, த/பெ.தேவ்நாத் மண்டல், உதயகிரி, கஜபதி மாவட்டம், ஒரிசா மாநிலம், 3.அர்ஜுன் மண்டல், வ/25, த/பெ.சுகோ மண்டல், கஜபதி மாவட்டம், ஒரிசா, 4.கங்கா மண்டல், வ/26, த/பெ.கல்பாங் மண்டல், உதயகிரி, கஜபதி மாவட்டம், ஒரிசா ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுகைது செய்யப்பட் 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.