தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைபொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கானநடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்புசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள்அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணைஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல்ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலையஎல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள்விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 03.07.2022 முதல் 09.07.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனைசெய்தது தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 146 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 280.86 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1.3கிலோ எடை கொண்ட மாவா மற்றும் ரொக்கம் ரூ.207/- பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, C-5 கொத்தவார்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு நேற்று (09.07.2022) கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நாராயண முதலி தெருவில் உள்ள ஒரு கிடங்கில் கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைபாக்கெட்டுகள் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி கிடங்கில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள்மறைத்து வைத்திருந்த 1.ஈஸ்வர் சிங், வ/26, த/பெ.சலேசிங், நம்புலியர் தெரு, ஏழுகிணறு, சென்னை, 2.பரத்சிங், வ/22, த/பெ.விக்காராம் சிங், நம்புலியர் தெரு, ஏழுகிணறு ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். மேற்படி கிடங்கில் சோனைகள் மேற்கொண்டு, 247 கிலோ எடைகொண்ட ஹான்ஸ், ரெமோ, ஸ்வாகத், ரெமோ, விமல், வி1 ஆகிய குட்கா பான்மசாலாபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள மேற்படி கிடங்கின் உரிமையாளர் ஜக்மல் சிங் என்பவரை தேடி வருகிறார்கள்.