சென்னை சைதாப்பேட்டையில் புதிய மின் அமைப்புகள்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 140 வளையசுற்றுத்தர அமைப்புகளை (Ring Main Unit) மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர்                                செந்தில்பாலாஜி தலைமையில் 

(25.07.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தம்1,20,000 மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இந்தத்தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்குவதற்காக 7 எண்ணம் துணை மின்நிலையங்களும், 872 எண்ணம் மின்மாற்றிகளும் ஏற்கனவே இயக்கத்தில் உள்ளனஇதுதவிர, கீழ்கண்ட மேம்பாட்டு பணிகள்தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்கமானக்கழகத்தால் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வ.

எண்.

மேம்பாட்டுப் பணிகளின் விவரங்கள்

அளவு (கி.மீ)/ எண்ணிக்கை

மதிப்பீட்டுத் தொகை(இலட்சத்தில்)

1.

புதியதாக 33 கி.வோ. இண்டோர்பிரேக்கர்கள் மாற்றப்பட்ட துணை மின்நிலையங்கள்

2 எண்ணம்

237.60

2.

புதியதாக 11 கி.வோ. இண்டோர்பிரேக்கர்கள் மாற்றப்பட்ட துணை மின்நிலையங்கள்

2 எண்ணம்

151.20

3.

புதியதாக நிறுவப்பட்ட உயரழுத்தபுதைவட பணி

7.285 கி.மீ.

135.00

4.

புதியதாக நிறுவப்பட்ட தாழ்வழுத்தபுதைவட பணி

3.385 கி.மீ.

38.90

5.

புதியதாக நிறுவப்பட்ட மொத்த விநியோகமின்மாற்றிகள்

22 எண்ணம்

247.00

6.

புதியதாக திறனி உயர்த்தப்பட்டமின்மாற்றிகள்

10 எண்ணம்

84.20

7.

புதியதாக நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தரஅமைப்புகள் (RMU)

140 எண்ணம்

2541.00

8.

புதியதாக நிறுவப்பட்ட மின் விநியோகபெட்டிகள்

49 எண்ணம்

43.60

9.

புதியதாக தளம் உயர்த்தப்பட்ட மின்விநியோக பெட்டிகள்

100 எண்ணம்

39.00

மொத்தம்

3517.50

இதுவரையிலும், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்காக மட்டும் ரூ.3517.50 இலட்சம் தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தொகுதிமக்களின் நலனை கருத்திற் கொண்டு அவர்களுக்குதங்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டிசெலவிட்டுள்ளதுஇந்த 2022-2023 ஆம் ஆண்டில் சைதாப்பேட்டைசட்டமன்ற தொகுதியில் சுமார் 11.45 கி.மீ. தூரத்திற்குபுதிய உயரழுத்த புதைவடங்களும், 21.12 கி.மீ.தூரத்திற்கு புதிய தாழ்வழுத்த புதைவடங்களும்ரூ.455.23 இலட்சம் செலவிலும், 21 எண்ணம் புதியவளைய சுற்றுத்தர அமைப்புகள் ரூ.294 இலட்சம்செலவிலும், 62 எண்ணம் புதி  ின் விநியோகபெட்டிகள் ரூ.55.17 இலட்சம் செலவிலுமாக மொத்தம்ரூ.804.40 இலட்சம் செலவில் நிறுவப்பட உள்ளன.

சென்னையின் உட்புற மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர  ேங்குவதால் பில்லர் பெட்டிகளை மழைக்காலங்களில் OFF  செய்து வைக்கும் நிலைஇருந்தது.  இதனை தவிர்க்கும் பொருட்டு மழைநீர்தங்கும் தெருக்களில் உள்ள பில்லர் பெட்டிகள்சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி முழுவதும்கண்டறியப்பட்டு 100 எண்ணம் பில்லர் பெட்டிகள்தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரம் வரைஉயர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால், மழைக்காலங்களிலும் பில்லர் பெட்டிகளை OFF செய்யமால் பொதுமக்களுக்கு மின் விநியோகம் தடையின்றி வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.  எதிர்வரும், வடகிழக்கு பருவ மழையினை கருத்திற்கொண்டு 19 வகையிலான 4,533 சிறப்புபராமரிப்பு பணிகள் மத்திய சென்னை மின் பகிர்மானவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளஇந்நிகழ்ச்சியில்,  மதுரவாயில் சட்டமன்றஉறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், 10வது மண்டல குழுத் தலைவர்கிருஷ்ணமூர்த்தி, 13வது மண்டல குழுத் தலைவர் துரைராஜ்சிவலிங்கராஜன், இயக்குநர்(மின் பகிர்மானம்) மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.