அனுப் காலித் தயாரிப்பில் சுனிஷ் குமார் இயக்கிய படம் “லாஸ்ட் 6 ஹவர்ஸ்” நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக விவியா சந்த் நடித்திருக்கிறார். தனது தங்கையை கற்பழித்து கொன்றவர்களை பழி தீர்க்கும் பழைய பஞ்சாங்க கதைதான் என்றாலும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் காட்சிகள் செல்கிறது. கப்பல் படை வீரராக வரும் பரத் விபத்தில் கண் பார்வையை இழந்து விடுகிறார். தனது தங்கையை கொன்றவர்களை கண் பார்வையற்ற நிலையில் பழி தீர்த்துக் கொள்ளும் காட்சிகளில் தத்ரூபவாக நடித்து அசத்தியிருக்கிறார் பரத். கட்டுமஸ்தான உடற்கட்டுடன் ஆங்கில படத்தில் வரும் ஆணழகன் போல் காட்சி தருகிறார்********
படத்தின் ஆரம்பத்தில் துபாயில் வில்லன்களுடன் சேர்ந்து கதாநாயகியும் திருட்டு தொழில் செய்வது வித்தியாசமான கதையம்சம்தான். ஒரு பாழடைந்த வீட்டிற்குள் நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 6 மணிவரைக்குள் வில்லன்களை பழிதீர்க்கும் படலம் நிறைவேறி விடுகிறது.