Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “கொலை”. இப்படத்தை எழுதி இயக்கியவர்: பாலாஜி K குமார். இப்படத்தை தயாரிப்பாளர்கள்: கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப் P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & RVS அசோக் குமார் ஒளிப்பதிவு இயக்குனர்: சிவகுமார் விஜயன் இசையமைப்பாளர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் எடிட்டர்: செல்வா R.K கலை இயக்குனர்: K ஆறுசாமி VFX மேற்பார்வையாளர்: ரமேஷ் ஆச்சார்யா ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம் மறுபதிவு கலவை: A M ரஹ்மத்துல்லா. ஆடை வடிவமைப்பாளர்: ஷிமோனா ஸ்டாலின் ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ நடன இயக்குனர்கள்: சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா–ரேகா (D’One)
இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, “இந்த படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விஷயம். இந்த படம் இயக்குனர் பாலாஜியின் கனவு. நான்உறுதியாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்த படம் உலகதரமிக்க சிறந்த படமாக இருக்கும். இந்தபடத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம்இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார்,
இந்தபடத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார். ஒருஇசையமைப்பாளராக, இந்த படத்தின் இசையமைப்பாளர் உடைய பணி எனக்கு உலகதரமாக தெரிகிறது. படதொகுப்பாளர் இந்த படத்தின் கதையை புரிந்து, அதை தொகுத்துள்ளார். இந்த படத்தில் CG கலைஞர்ரமேஷ் ஆச்சார்யா பெரிய பணியை செய்துள்ளார். அது பேசப்படும். ரித்திகா, மீனாட்சியுடன் பணிபுரிந்ததுபெரிய சந்தோசம். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் நன்றி. என்றார்.