தற்போது, இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஆனால், இப்படத்தில் மூன்று பேரும் நாயகர்கள் மாதிரி தான் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் எனக்கு அம்மா இருக்கிறார். எனக்கென்று தனியாக கதை இருக்கிறது. எனக்கு இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் புதுமுகம். என்னுடைய கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த கதையைக் கேட்டேன். இந்த கதையைக் கேட்கும்போது என் வாழ்க்கையில் இருந்து எடுத்த மாதிரிதான் இருந்தது. இந்த படத்தில் பெண் தேடும் பாத்திரம், ஒரு கட்டத்தில் நான் இறந்த காலத்தில் சென்றே தேடிக் கொள்கிறேன் என்று செல்லும்படியாக இருக்கும்.*******