வ.கெளதமன் இயக்கத்தில் “மாவீரா” திரைப்படம்

.கௌதமன், “கனவே கலையாதே” “மகிழ்ச்சிதிரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதிஇயக்கும் படத்திற்குமாவீராஎன்று பெயரிடப்பட்டிருக்கிறது.  வி.கே புரடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ளசெய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என இயக்குநர் .கெளதமன் உறுதிபட தெரிவித்தார்.**********

ஜிவி பிரகாஷின் உணர்ச்சிப்பூர்வமான இசையில் உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார்கவிப்பேரரசுவைரமுத்து. மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியானமாவீராகுறித்து மேலும்தகவல்களை பகிர்ந்த அவர், “என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதசந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒருதரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும் தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனைபடைத்துவிட்டேன். முந்திரிக்காடு, வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது. “அத்து மீறினால் யுத்தம்என்கிறஇலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறேமாவீராதிரைப்படம்,” என்றுகூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கதை கேட்ட கணத்திலேயே இசைப் பொறுப்பேற்ற ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும், “உனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே இப்படைப்பு ஒரு தலைநிமிர்வுஎன்று வாழ்த்தியதோடுபுலிக்கொடிஎங்கக் கொடிநாங்க

பூமிப்பந்தின் ஆதிக்குடி

எனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப்பாடும் பாடலாக எழுதித்தந்துஎனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும்கவிப்பேரரசுவைரமுத்து அவர்களுக்கும்நெகிழ்ந்த நன்றிகள்,” என்றார்.

மாவீராதிரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளிவர்மன் தீட்ட, கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், சண்டைப் பயிற்சியைஸ்டண்ட்சில்வாவும், படத்தொகுப்பை ராஜாமுகமதுவும், மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகையர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் மகிழ்வோடுஇயக்குநர் .கெளதமன் தெரிவித்தார்.