ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
கேள்வி: திமுக பொதுக்குழுவிலே அதிமுக வலிமை இல்லாமல் நான்கு ஐந்து துண்டாக உடைந்துள்ளது என்றும் அவர்களுக்கு என்று கொள்கை கிடையாது. திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் கொள்கையாக வைத்துள்ளார்கள் என்று முதல்வர் பேசியுள்ளாரே?
பதில்: திமுகவை பொறுத்தவரையில் குடும்ப ஆதிக்கம் மிகுந்த இயக்கம். அந்த கட்சியை பொறுத்தவரையில் கட்டி வைக்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போலத்தான் உள்ளது. அந்த நெல்லைக்காய்மூட்டை சிதறும் என்பது விரைவில் நடக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு பொறுப்பும் இல்லாமல் முரசொலி செல்வம் காலில் விழுந்து எல்லோரும் ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு உள்ளது. இவர்கள் எப்படிப்பட்ட பகுத்தறிவுவாதிகள் பாருங்கள். தந்தை பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள். அண்ணா வழி வந்தவர்கள் நாங்கள் என்று கையை துக்கிக்கொண்டு பேசினால் மட்டும் போதுமா?. சுப்புலட்சுமி ஜெகதீசன் இவர்களுக்கிடையே குடும்ப ஆதிக்கம் கட்சியில் மூத்த தலைவர் மதிக்கப்படுவதில்லை என்ற அடிப்படையில் கட்சியை விட்டு ஒதுங்கிக்கொண்டார். அந்த துணை பொதுச்செயலாளர் பொறுப்பை யாருக்காவது வழங்கியிருக்கலாம் அல்லவா? அதனை அவருடைய தங்கைக்கு அளித்துள்ளார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று அண்ணா சொல்வார். கழகம் ஒரு குடும்பம் என்று சொல்வார். இதுபோன்றுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கழகம் ஒரு குடும்பம் என்று ரத்தத்தின் ரத்தமாக கழகத்தில் உள்ளவர்களை பாவித்து குடும்ப பாசம் மிக்க கட்சியாக மாற்றிக்காட்டினார். புரட்சித் தலைவி அம்மாவை எல்லோரும் அம்மா என்று அழைத்து ஒரு குடும்ப பாசமுள்ள இயக்கமாகதான் கட்சியை அம்மா மாற்றியுள்ளார். இன்றைக்கும் கழகம் ஒரு குடும்பம் என்றால் அது கழகம் மற்றும் தான். ஆனால் குடும்பமே கழகம் என்றால் அது திமுகதான். அண்ணா கூறியதுபோல தம்பி உடையான் படைக்கு அஞ்சான். ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரையில் தங்கை உடையாள் படைக்கு அஞ்சான். இதுபோல குடும்பத்தின் ஆதிக்கம் முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற வார்த்தையை தெரிவிக்கிறாரே தவிர சர்வாதிகாரத்தை எங்கே கட்சியினரிடம் காண்பித்தார். உள்ளாட்சி பிரதிநிதிகளிலிருந்து டாப்டு பட்டம் என்று சொல்வார்கள். அதாவது கீழிலிருந்து மேலே வரை அவர்கள் அளவில் அதிகார துஷ்பிரயோகங்கள் அத்துமீறல்கள் அதியாயங்கள் கட்ட பஞ்சாயத்துக்கள் காவல்துறையினரை அடிப்பது அரசு ஊழியர்களை அடிப்பது ஊன்றிக்கொட்டுவது இதுபோன்ற வேடிக்கை எல்லாம் நடைபெற்று வருகிறது.