புரட்சித்தலைவர் கட்சி ஆரமிக்கும்போதுகூட சொன்னார்கள்.புரட்சித்தலைவர் படம் எப்படி 100 நாட்கள்ஓடியதே அதுபோல 100 நாட்கள் கடந்த பின்னர் கட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆனால்புரட்சித்தலைவர் எனக்குப் பின்னாலும் ஆயிரம் ஆண்டுகள் கழகம் நிலைக்கும், தழைக்கும் வளரும், ஓங்கும் ஆலமரம் போல என்றார். இன்றைக்கு எல்லோருக்கும் நிழல் தருகின்ற ஒரு இயக்கமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நிழல் தரும் வகையில் கழகம் இருக்கின்றது. புரட்சித்தலைவருக்குப் பிறகு அம்மா அவர்கள் கழகத்தை கட்டிக்காத்து. ஒன்னரைகோடி தொண்டர்களோடு ராணுவ கட்டுப்பாட்டோடு இந்த இயக்கத்தை வழிநடத்தினார். 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தலைவருக்குப் பிறகு கட்சி இருக்காது என்றார்கள். அம்மா கழகத்தைக் கட்டிக் காத்தார். அதுபோல அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சி ஆட்சி இருக்காது என்றார்கள். எடப்பாடியார் முதல்வராக இருந்தார். அவர் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து கட்சி வழி நடத்தப்பட்டு இன்றைக்குக் கட்சி 50வது ஆண்டை கடந்து 51வது ஆண்டை அடியெடுத்து வைக்கிறோம். நாளை (இன்று) புரட்சித்தலைவர்., புரட்சித்தலைவி அம்மாவின் சிலைகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு
கேள்வி நாளை ( இன்று) பேரவை கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளுமா?
பதில் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. ஆலோசனை செய்யாத விஷயத்தை நான்எப்படிச் சொல்ல முடியும். இது குறித்து சட்டமன்ற கட்சிதான் முடிவு செய்யும். 63 பேர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையிலே அந்த விதி, மரபு, மாண்பு இதை எல்லாம் கடைப்பிடித்து மாண்புமிக்கவராக பேரவைத்தலைவர் இருக்கவேண்டும். அவரின் நடவடிக்கையை பொறுத்துத்தான் சட்டமன்ற கட்சி முடிவுஎடுக்கும். இப்போது அதைப்பற்றி எந்த ஆலோசனையும் நடக்கவில்லை.
கேள்வி :நீங்கள் அளித்த கடிதம் நிராகரிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : இப்போது எப்படி அனுமானமாகச் சொல்ல முடியும். நாளைதான் தெரியும்.இதனைச் சட்டமன்ற கட்சிமுடிவு செய்யும்.
கேள்வி : மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அமைச்சர் ஆய்வு செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.இதுதான் அண்ணா வகுத்து தந்த கொள்கைப்படிதான்புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா, அதுபோல கட்சியும் கடைப்பிடிக்கின்ற விஷயம். கூட்டாட்சிமுறையில் மாநிலத்தின் எந்த உரிமையும் பறிக்கக்கூடாது. மாநிலத்திற்குக் கூடுதலான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் ஆதிகாலம் தொட்டு கழகத்தின் நிலை. அந்த நிலையைத்தான் நாம் சொல்ல முடியும். எதுவாக இருந்தாலும் மாநிலத்திற்கு என்று ஒரு தனித் தன்மை இருக்கின்றது. மாநிலத்தின் தனித் தன்மைபறிப்பதோ,குறைப்பதோ என்பது எங்கள் கட்சியினுடைய கொள்கை கிடையாது.இது ஏற்றுக்கொள்ள முடியாதவிஷயம். உரிமையைப் பறிக்கும் விஷயமாக இருந்தால் அது தவறு. உரிமையைப் பறிக்காத விஷயமாக மக்கள் நலன்சார்ந்த விஷயமாக இருந்தால் அது நல்லதுதானே. எங்கள் கட்சியைப் பொறுத்த வரையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி. மாநிலத்தின் மக்கள் சார்ந்து மத்திய அரசுத் திட்டங்களைக் கொண்டுவரும்போது அது நல்ல விஷயம்தானே.இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. இதில் மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் விஷயமாக இருந்தால் எங்கள் கொள்கைக்கு மாறுபட்ட விஷயமாகத்தான் பார்க்க முடியும். நீங்கள் குறிப்பிட்டது மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் விஷயமா, மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயமா மக்கள் முன்னேற்றம் சார்ந்த விஷயமா இவை அனைத்தையும் பார்த்துத்தான் நான் சொல்ல முடியும். இந்த ஆய்வை வைத்து கருத்துச் சொல்ல முடியாது.
கேள்வி : வரும் தேர்தலை மையப்படுத்தித்தான் மத்திய அமைச்சர்கள் இங்குத் தொடர்ந்து வருவதாகக் கருதப்படுகிறதே?
பதில் : ஒரு கட்சி வளர்ச்சி என்பது அதனுடைய கொள்கைகள், அந்த கட்சியினுடைய மக்கள் நலன்சார்ந்த திட்டங்களைக் கொண்டு வருவது. மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்காமல் மக்களுக்கு நல்லது செய்கின்ற வகையில்தான் கட்சியின் அணுகுமுறை இருக்கும்போது தான் கட்சி வளரும். ஒரு திட்டத்தை வைத்து நீங்கள் குறிப்பிட முடியாது. திட்டத்தை வைத்து உடனே கட்சி வளர்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. திட்டம் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்பெறுகிறது இப்படிதான் மக்கள் பார்ப்பார்கள். மக்கள் நன்றாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். எது நல்லது கெட்டது என்று அனைத்தும் தெரியும். அதன் அடிப்படையில் அவர்களின் தீர்ப்பு இருக்கும். எது எப்படி இருந்தாலும் சரி மக்கள்தான் இறுதி எஜமானர்கள்.
கேள்வி :ஓ..பன்னீர்செல்வம் சமாதான பேச்சுக்கு வருவதாகச் சொல்கிறார்கள்.அது குறித்து விவாதிக்கப்பட்டதா?
பதில் : எதுக்கு விவாதிக்க வேண்டும் .விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லையே. அவர் நீக்கம் என்பது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அவரும் அவர் சார்ந்த சிலபேரும். உங்களுக்கே தெரியும்.சட்டமன்றத்திலே கருணாநிதியை எப்படிப் பேசினார் என்பது.எப்படிப் புகழ் பாடினார். வாழ்த்து பாடினார் என்பது தெரியும். அவர் மகன் ரவீந்திரநாத் எப்படி முதலமைச்சரை அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறார் என்று பேசியது எல்லோரும் தெரியும். இணைந்த கைகள் போன்று திமுகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். இன்று சமூக ஊடகங்கள் வந்துவிட்டது. எனவே யார் எந்த மனநிலையில் உள்ளார்கள்.யார் பேச்சில் எதிர்ப்பு நிலை தெரிகிறது என்று பார்த்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும் சரி, அவரை சார்ந்தவர்களும் சரி திமுகவை என்றாவது கடுமையாக பேசியுள்ளார்களா. இன்றைக்கு எங்கள் கட்சியில் பேசுகிறோம். ஆர்பாட்டம் செய்கிறோம். ஜனநாயக விரோதபோக்குகளை மாநில அரசு கடைபிடிக்கும்போது நாங்கள் அனைத்து விதமான எதிர்ப்புகளை பதிவுசெய்கின்றோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று வீதியில் இறங்கி போராடுகிறோம். அதுபோல திமுகவை எதிர்த்து இவர்களால் அரசியல் செய்ய முடியுமா. அரசியல் செய்ய முடியாமல் திமுகவுடன் கைகோர்பவர்களை நாங்கள் எப்படி கைகோர்க்க முடியும். அம்மாவை பொறுத்தவரையில் கருணாநிதி என்றுதான் சொல்வார். ஓ.பன்னீர்செல்வத்தை திமுக பழைய தலைவரின் பெயரை சொல்ல சொலுங்கள் பார்ப்போம். சொல்ல மாட்டார். அவ்வளவு பாசம் அவருக்கு.என்றார்.