சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் படம் “DR 56”

ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும்கன்னட  மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம்    DR 56 ” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாகஉள்ளதுதேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.**********

ஒளிப்பதிராகேஷ் சி திலக் இசைநோபின் பால்சார்லி 777 படத்திற்கு இசையமைத்தவர்)  வசனம்ஷங்கர் ராமன் பாடல்கள்சரவணவேல்.S.K, ஷங்கர் ராமன்எடிட்டிங்விஷ்வா N M, ஸ்டண்ட்தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ( இவர் கேஜிஎப், காந்தாரா ஆகிய படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார் ). 

நடனம்கலை,நரசிம்ம ஆனேக்கல்  மக்கள் தொடர்புமணவை புவன்இணை தயாரிப்பு – Dr.A.B.நந்தினிகதை, திரைக்கதை,தயாரிப்புப்பிரவீன் ரெடி.T இயக்கம்ராஜேஷ் ஆனந்த் லீலா  ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அவரே  படத்தை வெளியிட இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா பாகிர்ந்தவை…. இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டுதிரைக்கதை அமைத்திருக்கிறோம். ப்ரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ளார்இந்த கதையை சொல்லும்போதே ப்ரியாமணி மிகவும் பிரம்மிப்பானார். நேர்த்தியான CBI அதிகாரியாக நடிக்கதன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரேகாட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்துஎன்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். ப்ரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுபடம் வருகிற டிசம்பர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.