தமிழ் திரையுலகம் எப்போதும் திறமைசாலிகளை தன்வயப்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் காவிரி நதிதீரத்தில் அமைந்த மன்னார்குடி மண்ணில் பிறந்து, இளம் வயதிலேயே ஏற்பட்ட சினிமா கனவை நனவாக்ககூத்துப்பட்டறை, புனே திரைப்படக் கல்லூரி, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குபயணித்து, திரைத்துறை சார்ந்த தொழில் நுட்பங்ளை ஆர்வமுடன் கற்றுக்கொண்டு, அதனை தமிழ் திரைஉலகில் அறிமுகப்படுத்தி, தனக்கான வாய்ப்புகளை உருவாக்கி நடிகரானவர் ஸ்ரீதர் தொழிலதிபர், கலைஞர் என்ற இரட்டை அடையாளத்தை சுமந்து கொண்டு, உற்சாகமான நடிகராக வலம் வருகிறார்.************
இவரை அண்மையில் சந்தித்தோம். உங்களைப் பற்றி..?
மன்னார்குடியில் பிறந்தேன். இங்கு பிரபலமான ஹோட்டல் காசி எனும் முன்னணி நிறுவனத்தினன் உரிமையாளரின் குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய தந்தையார் பிரபலமான தேசிய கட்சி ஒன்றில் பல்வேறுபொறுப்புகளில் பதவி வகித்தவர். அம்மா குடும்பத் தலைவி. 15 வயதாக இருக்கும் போது பரதநாட்டியத்தில்ஆர்வம் ஏற்பட்டு அக்கலையை கற்று அரங்கேற்றம் செய்தேன். அதனைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்றநடன கலைஞர்களுக்கான பிரத்யேக போட்டி ஒன்றில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றேன். இந்தத் தருணத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற என்னுடைய பால்ய பிராயத்து ஆசை கொழுந்துவிட்டுஎரிந்தது.
நடிகனாக வேண்டும் என்றால் கூத்து பட்டறை என்னும் நடிப்பு பயிற்சி கல்லூரியில் இணைந்து தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று என்னை ஆற்றுப்படுத்தினார்கள். கூத்து பட்டறையில் இணைந்தேன். அங்குசந்தோஷ் பிரதாப், மக்கள் செல்வன் விஜய சேதுபதி போன்ற மூத்த மாணவர்களை பற்றி அறிந்து கொண்டு, ஆர்வமுடன் நடிப்பை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். வாய்ப்புகளையும் தேடத் தொடங்கினேன். நினைத்தபடி வாய்ப்புகள் எளிதாக அமையவில்லை.
இந்த தருணத்தில் சினிமா மீது இருந்த அளவற்ற காதலால் திரைப்படக் கலை உருவாக்கம் குறித்து கற்கத்தொடங்கினேன். இதற்காக என்னுடைய பெற்றோரின் அறிவுரை படி சிங்கப்பூரில் உள்ள முன்னணி திரைப்படகல்லூரியில் இணைந்து ஃபிலிம் மேக்கிங் எனப்படும் திரைக் கலையை கற்றேன். இதனைத் தொடர்ந்து மேலும்கற்க வேண்டும் என்பதற்காக பூனா திரைப்படக் கல்லூரியில் இணைந்து கற்கத் தொடங்கினேன். இதனையடுத்து திரைப்படத் தொழிலின் நுட்பங்களை கற்பதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் இணைந்து கற்கத் தொடங்கினேன். இதன் போது நடிப்பு, ஒளிப்பதிவு என இரண்டு பிரிவிலும்தேர்ச்சி பெற வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன்.
அதன் பிறகு கையில் ஒரு கேமராவுடன் மீண்டும் வாய்ப்புகளை தேடிப் பயணித்தேன். இந்த தருணத்தில்திரைப்படத்துறையில் புதிய தொழில்நுட்பங்களுடன் ஒளிப்பதிவு கருவிகள் அறிமுகமாகின. ஆனால் அவைசென்னையில் உள்ள திறமை மிக்க தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கிடைப்பதிலும், அதனைபயன்படுத்துவதிலும், அதற்கான தொழில்நுட்பத்தினைப் பெறுவதிலும் பெரும் இடைவெளி இருந்தது. இதனைகருத்தில் கொண்டு ஒளிப்பதிவு கருவிகளை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, தென்னிந்திய திரைத்துறை முழுவதும் வாடகைக்கு குறைந்த கட்டணத்திற்கு வழங்கி வருகிறேன். கடந்த 19 ஆண்டுகளாகதென்னிந்திய சினிமா முழுவதும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான உதவியைஅளித்து வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு கருவிகள் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நிறைவு பெற்றவுடன் இறுதிகட்டப் பணிகள் முழுமையாக ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் பாடல் பதிவரங்கங்கள், பின்னணி.. உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் வசதிகளையும் அறிமுகப்படுத்தினோம்.
அனுபவங்களை கற்றுக் கொண்ட பிறகு ‘மின்மினி‘ என்ற பெயரில் சிறிய பட்ஜெட்டில் படம் ஒன்றை தயாரித்துகதாநாயகனாக நடித்தேன்.
அதன் பிறகு ‘ஷார்ட் கட்‘ எனும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறேன். டொரன்டோவில் நடைபெற்றசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கானவிருது கிடைத்தது.
அதன் பிறகு தற்போது இயக்குநர் கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் தயாராகி விரைவில் வெளியாக இருக்கும்‘ஓங்காரம்‘ என்னும் படத்தில் அழுத்தமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன்.
ஓங்காரம் பட அனுபவம் குறித்து..?
தமிழகத்தின் தென் பகுதியில் நிஜமான காவல்துறை அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்றசம்பவங்களை தழுவி, ‘ஓங்காரம்‘ படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. இயக்குநர் கதையை விவரித்து அதில்நேர்மையான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். என்னுடையகட்டுப்பாட்டு எல்லைக்கு உட்பட்ட 33 கிலோ மீட்டர் தொலைவிற்குள் எந்தவித அசம்பாவித சம்பவங்களையும்நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்து மிடுக்காகவும், காக்கி சட்டைக்கே உரியகம்பீரத்துடனும் நடித்தேன். இயக்குநர் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளை பற்றிய விவரங்களையும், அவர்கள் உடுத்தும் உடை, அணியும் அடையாளம், அவர்களின் அதிகார எல்லை.. என பல நுட்பமானவிவரங்களை விவரித்தார். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி நிற்க வேண்டும்? மக்களிடம் எப்படி பேசவேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதை இயக்குநர் விவரிக்க விவரிக்க அதனை உட்கிரகித்துக் கொண்டு, அவர் எதிர்பார்த்தபடியே நடித்து, பாராட்டைப் பெற்றேன். ஒரு காட்சியில் விசாரணை கைதியையும், அவரைகாண வரும் உறவினர்களையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது போன்ற காட்சி. இதில் இயக்குநர்விவரித்த படி நடித்தேன். படக்குழுவினரும், பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி பாராட்டினார்கள். மனதிற்குள் புது உற்சாகம் பிறந்தது. இந்த தருணத்தில் கூத்துப்பட்டறை மற்றும் பூனா திரைப்படக்கல்லூரியில் நடிப்பிற்காக பெற்ற பயிற்சி உறுதுணையாக இருந்தது.
ஓங்காரம் படத்தின் எந்த அம்சம் பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்..?
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு குறித்து அதிக அளவில் இந்த கதையில் இடம் பெற்றிருந்தது. சட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் இடம் பெறாமல், அதனை பொதுமக்களும்எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதையும், சம்பவங்களும் பின்னப்பட்டிருந்தது. மேலும் உண்மைசம்பவங்களை தழுவி எழுதப்பட்டதால், இந்த திரைப்படம் வெளியான பிறகு ஒரு புரட்சி நிகழும் என்றநம்பிக்கையில் நடிக்க ஒப்புக் கொண்டேன். பி சி ஆர் வழக்கு என இதனை எளிதாக கிராமப்புற பகுதியில்சொல்வார்கள். குறிப்பாக மதுரை முதல் தேனி வரை இந்த வழக்கு பிரபலம்.
அதைத்தொடர்ந்து ரவுடி ஒருவர் பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக்கை வெட்டும் காட்சியும் இடம்பெற்றுஇருக்கிறது இதுவும் அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். தனியார் கல்லூரி ஒன்றின்தாளாளருக்கு அந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் பெண்மணி, மாணவிகளை தவறான பாதையில் செல்லவழிகாட்டிய உண்மை சம்பவமும் இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுபோன்ற பல அழுத்தமான சம்பவங்களுக்காக இந்த படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க சம்மதித்தேன்.
இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து..?
மலையாளத்து நடிகையான வர்ஷா விஸ்வநாத் என்ற நடிகை ஜோடியாக நடித்திருக்கிறார்கள். மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்திருக்கிறார்கள். தமிழில் அவர்கள் அறிமுகமாகும் படம் இது. திறமையான நடிகை. காட்சிகளை விவரித்தவுடன் உடனடியாக சக நடிகர்களுடன் முழுமையான ஒத்துழைப்புஅளித்து நடித்தார்.
படத்தில் சவாலாக அமைந்த விசயம் என்ன?
படத்தில் என்னுடைய கதாபாத்திர அறிமுகக் காட்சி சவாலாக இருந்தது. அந்த காட்சியை இயக்குநர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ஒரு நாள் முழுவதும் பொறுமையுடன் காத்திருந்து நன்றாக நடிக்க வேண்டும்என எடுத்துரைத்து, நடிப்பதற்கு சுதந்திரம் வழங்கினர். அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. பின்னணி பேசும்போது அந்த காட்சியை பார்த்து உண்மையில் பிரமித்துப் போனேன்.
சண்டைக் காட்சிகளில் நடித்த அனுபவம் எப்படி?
போலீஸ் அதிகாரி வேடம் என்பதாலும், கைதிகள், குற்றவாளிகள் ஆகியோருடன் கைகலப்பு காட்சிகளிலும்கூட சண்டை பயிற்சி இயக்குநர் நேரலையாக சண்டை காட்சிகளை அமைத்து படமாக்கினார். இது எனக்குசவாலாகவும், புதிதாகவும் இருந்தது. மேலும் கால்பந்து மைதானம் ஒன்றில் ரவுடிகளுடன் நேரடியாக மோதும்சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. சண்டை பயிற்சி இயக்குநர் ஃபயர் கார்த்திக், இதனைவித்தியாசமாக அமைத்திருக்கிறார். இரண்டு நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எனது உடல்ஆரோக்கியம் குன்றியது. இருப்பினும் படப்பிடிப்பு குழுவினர் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக தொடர்ந்துநடித்தேன். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓங்காரம் படத்தின் இசை குறித்து..?
படத்தில் இரண்டு பாடல்கள். இரண்டும் வெவ்வேறு இசை வடிவம் கொண்டது. பாடல்களை விட படத்திற்குபின்னணி இசை முக்கியமானது. இசை அமைப்பாளர் கடுமையாக உழைத்து, இயக்குநரின் எதிர்பார்ப்பையும், திரைக்கதையின் தேவையும் உணர்ந்து அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். தொடர்ந்து எந்த மாதிரியான படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்..?
தினந்தோறும் கதைகளை கேட்டு வருகிறேன். கதைகள் புதுமையாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தால்அதில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். கதையின் நாயகனாகவும், அழுத்தமான வேடத்திலும் நடிக்கவேவிரும்புகிறேன். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற உங்களின் கனவு கதாபாத்திரம் குறித்து…?
ஏராளமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக சரித்திர நாயகர்களின்கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம். தஞ்சை மண் எனக்கு பரிச்சயம் என்பதால் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை உண்டு. பீரியாடிக் ஃபிலிம்எனப்படும் முந்தைய காலம் தொடர்பான படைப்புகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதற்காகதற்போது விரிச்சுவல் புரொடக்ஷன் எனப்படும் மெய்நிகர் திரைகலை நுட்பத்தை கற்று வருகிறேன்.
இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து இதுபோன்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் வரக்கூடும். இதற்காக தற்போது ஹாலிவுட்டில் நடைபெறும் பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டுவருகிறேன். தற்போது வரை 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணித்து பல ஆய்வுகளை இந்ததொழில் நுட்பத்திற்காக செய்திருக்கிறேன். இந்தப் பயணமே பெரும் பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
எதிர்கால திட்டம் குறித்து..?
‘ஷார்ட் கட்‘ எனும் படத்தில் நடித்த பிறகு என்னுடைய ஹாலிவுட் நண்பர்கள் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
தற்போது ‘இட் அது பட் ஆனால்..’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் எனது நடிப்பில் தயாரானமூன்று திரைப்படங்கள் வெளியிட்டிற்காக காத்திருக்கின்றன. நமக்கு எது அமைய வேண்டும் என்று இருக்கிறதோ… எதை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுஇருக்கிறதோ… அதனை அந்தந்த தருணத்தில் சாதுரியமாக புரிந்து கொண்டு சாத்தியப்படுத்தவேவிரும்புகிறேன்.
திரைத் துறையில் அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களே… திரைப்படத்தை இயக்கும் எண்ணம்உண்டா..?
உண்மையை சொல்லப்போனால் ‘போஸ்ட் மேன்‘ என்ற என பெயரிடப்பட்ட படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகிடைத்தது. ஆனால் தற்போது நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதால், திரைப்படத்தைஇயக்குவதை சற்று தள்ளி வைத்திருக்கிறேன்.