இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

​​ BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக மானக் மந்தன்; என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம்-II “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் – இந்திய தரநியமம் 17923: 2022 ” என்ற தலைப்பில், மானக் மந்தன்நிகழ்ச்சியை சென்னையில் இன்று 31 அக்டோபர் 2022மாலை நடத்தியது.

உடல் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளின் போது பங்கேற்பாளர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், விளையாட்டு மைதானத்தில் காயத்தைத் தவிர்ப்பதற்கும், உடல்நலம், உடற்தகுதி மற்றும் விளையாட்டு சேவைகள் பிரிவுக் குழு, SSD 05 மூலம் இந்திய தர நிர்ணய அமைவனம் , உள்நாட்டு இந்தியத் தரநிலை IS17923:2022–உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிகளில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது . இந்த தர நியமமானது ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், நடுநிலை மற்றும் இடைநிலைப் பள்ளி அதிகாரிகள், சமூக விளையாட்டுக் கல்விக்கூடங்கள், உபகரண உற்பத்தியாளர்கள், உபகரணம் வாங்குபவர்கள் மற்றும் அவற்றை நிறுவுபவர்கள், விளையாட்டு மைதான வடிவமைப்பாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பொது விளையாட்டு மைதான பாதுகாப்பில் அக்கறை கொண்ட வடிவமைப்பாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டுக் கல்விக்கூடங்களில் உடல் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளுக்கான முறையான பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தமுடிவெடுப்பவர்களுக்கு உதவும் மூலப்பொருள் தேவைகள் முதல் சோதனை வரை தரநிலையின் விவரக்குறிப்புகள் விவாதிக்கப்பட்டன. பெறப்பட்ட கருத்துக்கள் தரநியமத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக, சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றினார். Smt.G.பவானி, விஞ்ஞானி-E, இயக்குனர் மற்றும் தலைவர் (BIS-சென்னை கிளை அலுவலகம்) நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார்.

பார்வையாளர்களை வரவேற்றுப் பேசிய ஸ்ரீ கௌதம் ,விஞ்ஞானி-மற்றும் திரு கண்ணன் கோவிந்த்ராஜ், விஞ்ஞானி தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினார். நன்றியுரையுடன் மானக் மந்தன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.