ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம்

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.. வெளியிட்ட அறிக்கை: அரியானா மாநிலத்தில் சிந்தனைஅமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, நாடுமுழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.

அவரின் இந்த கூற்று மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல். மேற்குவங்க காவல்துறையின் சீருடைவண்ணம் வேறு தமிழ்நாட்டில் காவல்துறையின் சீருடை வண்ணம் வேறு. தமிழ்நாடு போக்குவரத்து மற்றும்சாலை பாதுகாப்புப் பணி காவல் துறையின் சீருடை வண்ணம் வேறு. இத்தகைய சூழலில் பிரதமர்முன்மொழிந்துள்ள ஒரே நாடு, ஒரே காவலர் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல்ஆகும்.