மேற்கு வங்கத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிறப்போடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்திலே அவர் வந்து திறந்து வைத்தது, உள்ளபடியே எங்களை பெருமைப்படுத்தியது, கலைஞர் அவர்களை பெருமைப்படுத்தியது, திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுடைய மேற்கு வங்கத்தின் பொறுப்பு கவர்னராக இருக்கக்கூடிய திரு. இல. கணேசன் அவர்களுடைய இல்லத்திலே நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்ககூடிய சூழ்நிலையில், என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்து மரியாதை நிமித்தம் என்னை சந்தித்து இருக்கிறார்கள்.
அதேநேரத்தில், என்னை அவசியம் மேற்கு வங்கத்திற்கு, கொல்கத்தாவிற்கு என்னுடைய விருந்தினராக வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவரது அழைப்பை நானும் ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்.
கேள்வி – நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருக்கிறது….
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதில் – இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், தேர்தல் சந்திப்பு அல்ல. தேர்தல் பற்றி பேசவில்லை, அரசியல் பற்றி பேசவில்லை. எனவே மரியாதை நிமித்தம் தான் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களே தவிர வேறு எதற்காகவும் அல்ல. அதை அவர்களே சொல்வார்கள்.