ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைரவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தக்ஷின் பாரத் மோட்டார் பயணம் சென்னையில் உள்ள தென்மண்டல (தக்ஷின்பாரத்) ராணுவ தலைமையகத்திலிருந்து இன்று வந்தடைந்தது. இந்த பயணம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
தக்ஷின் பாரத் பகுதி ராணுவ தலைவர் மேஜர் ஜெனரல் சுக்ரிதி சிங் தஹியா இந்த பயணத்தை வரவேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கான இந்த மோட்டார் சைக்கிள் பயணம் ஹைதராபாத் பீரங்கி மையத்தைச்சேர்ந்த 10 பேரால் மேற்கொள்ளப்படுகிறது. தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதால், அதை குறிக்கும் வகையில். தக்ஷின் பாரத் பயணம் என இதற்கு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஹைதராபாத் திரும்பி செல்வதற்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டா செல்ல உள்ளனர். முன்னதாக, அவர்கள் தனுஷ்கோடியில் இருந்து திருச்சி மற்றும் புதுச்சேரி வழியாக சென்னை வந்தடைந்தனர். ஹைதராபாத்தில் இருந்து தனுஷ்கோடி வரை பயணித்து மீண்டும் ஹைதராபாத் செல்வதே அவர்களின் பயணத் திட்டமாகும். இந்த பயணம் முழுவதிலும், இளைஞர்களுக்கும், தேசிய மாணவர் படையினருக்கும், ராணுவத்தில் சேர்வது தொடர்பாக ஊக்கமளிக்கும் விளக்கங்களை அவர்கள் வழங்கி வருகின்றனர்.
அக்டோர் 23ம் தேதியிலிருந்து அவர்கள் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தின் போது முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவத்தினரின் மனைவியர்உள்ளிட்டோரையும் அவர்கள் சந்திக்கின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள பீரங்கி மையம், பீரங்கி படைபிரிவுக்கான இரண்டாவது பயிற்சி மையமாக 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் தலைவராக தற்போது பிரிகேடியர் ஜெகதீப் யாதவ் உள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க கோல்கொண்டா கோட்டையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.