என் கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயதீர்த்த. இயக்கத்தில் ஜையீத் கான் – சோனல் மோன்டோரியோ நடிப்பில் உருவான படம் ‘பனாரஸ்’. வசதியான குடும்பத்தில் பிறந்த ஜையீத் கான், மோண்டோரியாவிடம் “கடந்த காலத்தில் நீ எனது மனைவி. நமக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதை கடந்த காலத்தை தெரிவிக்கும் நேரம் காட்டி மூலம் தெரிந்து கொண்டேன் என்று நம்ப வைக்கிறார். இதை நம்பிய மோண்டிரியா தனது படுக்கையில் ஜையீத் கானையும் படுக்க வைத்துவிட்டு தூங்கி விடுகிறார். இந்த நேரத்தை பயன்படுத்தி ஜையீத் கான் மோண்டிரியாவுடன் நெருக்கமாக இருப்பதை போல் செல் போனில் படம்பிடித்து தனது நண்பர்களின் போனுக்கு அனுப்பி விடுகிறார். அதை அவர்கள் இணையதளத்தில் பரப்பி விடுகிறார்கள். இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க காசி பனாரஸ் நகருக்கு சென்ற மோண்டிரியாவிடம் மன்னிப்பு கோருகிறார். மோண்டிரியா மன்னித்தாரா இல்லையா என்பதுதான் கதை. கங்கை ஆற்றின் அழகையும் காசி நகர வாழ்க்கை முறையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். இதயத்தை வருடிச் செல்லும் காட்சிகள் அதிகமிருக்கிறது. மன்னிப்பின் மகுத்துவத்தை உணரச் செய்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்********