கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ பூஜையுடன் தொடங்கியது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஜப்பான்’ திரைப்படத்தை  ராஜு முருகன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல்  நடிக்கவுள்ளார்.  புஷ்பாபடத்தில்மங்களம் சீனுஎன்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்தவர் .  ஜப்பான்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்விஜய் மில்டன், ‘ஜப்பான்திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.***********

ஏற்கனவே கார்த்திஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்ய ஜிவி பிரகாஷ்குமார் மும்முரமாகத்தயாராகியுள்ளார்மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும்ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

ஜப்பான்படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) அன்று காலை காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.

ராஜுமுருகன்கார்த்திட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்கிற தனித்துவமான, தரமான கூட்டணியின்  மீதுஇப்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைஜப்பான்கண்டிப்பாகபல மடங்கு விஞ்சும் என நம்பிக்கையுடன் வேலைகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.