சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசுபணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தையும், மிகவும் பழையகுடியிருப்பு கட்டங்களையும், புதியதாக குடியிருப்பு கட்டடம்கட்டப்படவுள்ள இடத்தினையும், சுற்றியுள்ள சாலைகளையும், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றை, இன்று(9.11.2022) நேரடியாக சென்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார்கள். ஆய்வு மேற்கொண்ட பின்னர் மாண்புமிகு அமைச்சர்அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, ஆய்வு மேற்கொண்ட விவரங்கள் குறித்து விளக்கி கூறினார்கள்.
சென்னை, தாடண்டர் நகர், சைதாப்பேட்டை தொகுதியின்ஒரு பகுதி. இதில்தான், தமிழக அரசின் பல்வேறு துறைகளைசார்ந்த துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்குஅரசின் சார்பாக கட்டி கொடுக்கின்ற குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள், அரசு ஒதுக்கீட்டில்குடியிருக்கிறார்கள். ஏ-வகை குடியிருப்புகள் 100, பி-வகைகுடியிருப்புகள் 136, சி-வகை குடியிருப்புகள் 812 உள்ளன. பொதுப்பணித்துறையை சார்ந்த பொறியாளர்களுக்கான 41 குடியிருப்புகள் உள்ளன.
தாடண்டர் நகர் வளாகத்தில், 72 பழைய குடியிருப்புகள்இருக்கின்றன. அவற்றை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள்கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறுஉத்தரவிட்டார்கள். பராமரிப்புப் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றபணிகள் எல்லாம் சரிவர நடைபெறுகிறதா என்பதையும், அனைத்து கட்டடங்களையும் இணைத்திடும் வகையில்உட்புறச்சாலை அமைக்க, அரசு ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த பணிகள் எல்லாம்நடைபெறுகிறதா என்பதையும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள்ஆய்வு செய்தார்கள்.
புதியதாக, 190 பி-வகை குடியிருப்புகள், ரூ.88.49 கோடிமதிப்பீட்டில், கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தகட்டடம் தரமாக கட்டப்படுகிறதா, மணல் பரிசோதனைசெய்தார்களா, கம்பிகள் தரமானதாக உள்ளதா, தண்ணீரை பரிசோதித்தார்களா, என்பதையெல்லாம் ஆய்வு செய்ய, ஆய்வகம் உள்ளதா என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள்ஆய்வு செய்தார்கள்.
இந்த குடியிருப்பு, 19 பல்லடுக்கு குடியிருப்பு கட்டடம்ஆகும். இதில், 10 அடுக்குக் குடியிருப்புகள் கட்டுமானப் பணிமுடிவடைந்துள்ளது. இன்னும் 9 அடுக்குக் குடியிருப்புகள்கட்டப்பட வேண்டியுள்ளதால், அவற்றை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்கும்படி மாண்புமிகு அமைச்சர்அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், புதியதாக 190 சி-வகை குடியிருப்புகள்கட்டுவதற்கு, 1.11.2022 அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. விரைவாகஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அந்த 190 “சி“வகைகுடியிருப்புகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
அரசு குடியிருப்புகளில் வசிக்கும், அரசு அலுவலர்களில் சிலர் கட்டடங்களில் பெயிண்ட் அடிக்க வேண்டும், சாலைகள்விரிவுப்படுத்த வேண்டும் என்றும், கழிவுநீர் கால்வாய்கள்அமைக்கப்பட வேண்டும் என்றும், மாண்புமிகு அமைச்சர்அவர்களிடம் கோரினார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குஎடுத்துச்சென்று, விரைவில் அனைத்து கோரிக்கைகளும்நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சிதுணை மேயர் திரு. மகேஷ்குமார், பொதுப்பணித்துறைமுதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு. இரா.விஸ்வநாத், சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. ஆயிரத்தரசு ராஜசேகரன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.