சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட பாரத சாரண, சாரணியர் தலைமை ஆணையருமான டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து எடுத்துரைத்த அவர், மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தினார். கொடி தினத்தின் முதலாவது ஸ்டிக்கரை வெளியிட்ட அவர், இதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிக பங்களிப்பு செய்வதோடு, இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு விரிவான பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சாரண, சாரணியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.