எல் ,என், எச் , கிரியேசன், லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் “என்ஜாய்.”சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கட் பட்டார்களா என்பதே “என்ஜாய்” சொல்லும் கதை.***********
இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்துசொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும். சமூகம் கொண்டுள்ளதளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும். இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ படம் இளைஞர்கள்கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி. பல படங்களுக்கு புரொடக்சன் மேனேஜராக பணியாற்றிய பெருமாள் காசி ‘என்ஜாய்‘ படத்தின் மூலம்இயக்குனராகியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – KN அக்பர், இசை – KN ரயான் . எடிட்டர் – மணி குமரன். பின்னணி இசை– சபேஷ்– முரளி. பாடல்கள் – விவேகா, உமாதேவி. நடனம்– தினேஷ். சண்டை– டேஞ்சர்மணி கலை– சரவண அபிராமன்.
நடிகர்கள்– மதன்குமார் டான்சர் விக்னேஷ் ஹரீஸ்குமார் நிரஞ்சனா ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா ஹாசின் சாருமிசா