நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களைஉருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கியபங்கு உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திருஅனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு திட்டத்தை வகுக்க பல்கலைக்கழகதுணைவேந்தர்களுடனான கூட்டத்தை விரைவில் தாம்கூட்டஉள்ளதாக  அவர் கூறினார்.

சென்னையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்தியஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்நடத்திய அவர், கேலோ இந்தியாவின் பல்வேறுமையங்களை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். விளையாட்டு அறிவியலுக்காக சில மையங்கள்திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 ஒரு விளையாட்டு வீரர் அறிவியலின் துணையின்றிஎதையும் சாதிக்க முடியாது எனக் கூறிய அமைச்சர், விளையாட்டு வீரர்களின் வெற்றியில் ஏராளமானஅறிவியல் உள்ளது என்றார். இந்த திசையில் மத்தியஅரசு பணியாற்றி வருவதாகவும், ஹரியானா மாநிலம்சோனிபெட்டில் ஒரு விளையாட்டு அறிவியல் மையம்உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேபோன்ற மையங்கள் கர்நாடக மாநிலம்பெங்களூரிலும், பாட்டியாலாவிலும்உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இத்தகையவிளையாட்டு அறிவியல் மையங்களைஉருவாக்குவதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களுடன்அரசு பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாக அமைச்சர்தெரிவித்தார்.

சுமார் 40 முதல் 50 பல்கலைக்கழகங்களின்துணைவேந்தர்களுடன் விரைவில் தாம் ஒரு கூட்டத்தைநடத்த உள்ளதாக  கூறிய அவர், விளையாட்டுத்துறையில்பல்கலைக்கழகங்கள் சிறப்பான முறையில் ஈடுபடமுடியும்என்றார். வெற்றிகரமான விளையாட்டு வீரர்களைஉருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமானபங்காற்ற முடியும் என்று கூறிய அமைச்சர், நாட்டில்உள்ள  943 தனியார் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொருபல்கலைக்கழகமும் 50 முதல் 100 விளையாட்டுவீரர்களை தத்தெடுத்து அவர்களது கல்வி மற்றும்விளையாட்டு திறனை  கவனித்து கொள்ளலாம் என்றுகூறினார்.  இவ்வாறு பல்கலைக்கழகங்கள் இதில்ஈடுபடும் போது நாட்டுக்கு சுமார் 900 முதல் 1000 உயர்தரமான விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள் என்றுஅமைச்சர் தெரிவித்தார்.  

 விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்கு பிரதமர்நரேந்திர மோடி தனிக் கவனம் செலுத்திவருவதாகஅமைச்சர் தெரிவித்தார்.