நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள்

கடந்த வருடம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களது கொழும்ப இல்லத்தில்பணிப்பெண்ணாக கடமை புரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் என்ற செய்தி இலங்கையில் மட்டுமல்லஉலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு செய்தியாக இருந்தது.

இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்தடயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டின் வறுமைகாரணமாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணி புரிந்து வந்த நிலையில் உடலில் தீ பரவிதீக்காயங்களுடன் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் முன்னாள் அமைச்சர்மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சிறுமியின் மரணம் தொடர்பான சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்டநால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,சிறுமி ஹிஷாலினியின் மரணத்தின் பின்னர் சமூக மட்டத்தில் இந்த சம்பவத்திற்கெதிராக பாரியஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டமை இங்குகுறிப்பிடத்தக்கது
இருப்பினும் சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கேள்வி பலர் மத்தியிலும் நிலவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்க. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய கொழும்பு இல்லத்தில் வீட்டுவேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஜூட் குமார் ஹிஷாலினியின்மரணம் தொடர்பிலான மரண விசாரணை சாட்சிப்பதிவுகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்படி வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பு நீதி மன்றத்திற்கு வந்திருந்த உயிரிழந்தஹிஷாலினியின் உறவினர்கள் சிலர்முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிற்கு எப்போது தகுந்த தண்டனைகிடைக்கும். அவரும் அவருடைய மனைவி உட்பட உறவினர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பட வேண்டும். அந்த நாளுக்காக நாம் காத்திருக்கின்றோம்என்று நீதி; மன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில்செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்ததாகவும் எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.

ஹிஷாலினி உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியமுன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரண விசாரணை சாட்சிப் பதிவுக்காக விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 4 ஆம் இலக்க சாட்சியாளரின் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள, தமிழ் மொழிபெயர்ப்பாளர்ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வழக்கின் மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 2023 ஜனவரி 10 ஆம் திகதிவரைஒத்தி வைக்கப்பட்டுள்ளது.