தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலககூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுகுழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் இன்று(13.12.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகதலைவர் டாக்டர். பி.சந்தரமோகன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும்மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கடந்த ஓராண்டில் சுற்றுலாத்துறையின்சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்மேம்பாட்டு பணிகள் குறித்த காட்சி விளக்கப்படம் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினருக்குதிரையிட்டு காண்பிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களின் சீரிய வழிக்காட்டுதலின்படிசுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு குழுவினர்பராட்டு தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் பேசுகையில்தெரிவித்தாவது,

மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் அவர்கள் முதலமைச்சராகஇருந்த போது சுற்றுலா வளர்ச்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தமிழ்நாடு சுற்றுலாத்துறையை உலகளவில் கவனம் பெறசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்கள். உதாரணமாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவிளையாட்டு வீரர்கள் பங்கேற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்பேட்டியினை உலகத்தரத்தில் குறுகிய காலத்தில் நடத்திஇந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் கவனம் முழுவதையும்தமிழகத்தின் மீது ஈர்த்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவினால் சுற்றுலாத்துறை மட்டுமல்லாது அதனை சார்ந்த அனைத்துதொழில் முனைவோர்களும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரியமுயற்சிகளால் கொரோனாவில் இருந்து மீண்டு, தற்போது சுற்றுலாத்துறை வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. தற்போது உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்பாடு செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்பாடுசெய்தல் ஆகியவற்றோடு, சுற்றுலாத்துறை மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கான புதிய இடங்கள் கண்டறியப்பட்டு ஆண்டுதோறும் 10 முதல் 15 இடங்கள் வரைமேம்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாத் தலங்களில் இளைஞர்கள் உற்சாகமாக மலை ஏறும்பயிற்சி, ஜிப்லைன் மேற்கொள்ளுதல் (கயிறு மூலம் நீர்நிலைகளை கடந்து செல்லுதல்) உள்ளிட்ட பல்வேறு சாகசசுற்றுலா மேம்பாட்டு பணிகள் தமிழகம் முழுவதும் உள்ளசுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுலாவை சார்ந்து பல தொழில் முனைவோர்கள்தங்களது  தொழில்களை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த இத்தகைய தொழில்முனைவோர்களின் ஆலோசனைகளையும் பெற்றுநடவடிக்களை மேற்கொள்வதற்காக சுற்றுலா வளர்ச்சி மற்றும்மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாபயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள் சங்கத்தினர்,வர்த்தக சபையினர், விருந்தோம்பல் மற்றும்உணவகத்துறையினர், சுற்றுலா பேருந்து நடத்துபவர்கள்சங்கத்தினர், கலைஞர்கள் ஆகியோரை கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது.  

சுற்றுலாத்துறையில் பல ஆண்டு காலமாக அனுபவம்வாய்ந்த தாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுதமிழ்நாட்டை உலகளவில் முதன்மை சுற்றுலா தலமாகஉருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றுமாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும்மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் திருமதி.டி.தேவகி, திரு.கே.பாண்டியன், திரு.டி.கருணாநிதி, கலைமாமணிவி.கே.டி பாலன், திரு. Ar Rm. அருண், திரு.கே.செந்தில்குமார், திரு..ப்சல், திரு.எஸ்.சுந்தர், திரு.பி.அசோகா, கலைமாமணி திருமதி.பார்வதி ரவிகண்டசால  ிரு.சுதர்சன், சுற்றுலா இணை இயக்குநர் திரு.ப.புஷ்பராஜ் மற்றும் சுற்றுலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.