சென்னை அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு ஆய்வு செய்தார் .

அண்ணா மேம்பாலம் (ஜெமினிமேம்பாலம்)  சென்னையின் மையப் பகுதியில்  ஐந்து சாலைகள் சந்திப்பில், அண்ணா சாலையில் கட்டப்பட்டதாகும். சுமார் 600 மீட்டர்நீளமுள்ள மேம்பாலத்தை, 1971 ஆம் ஆண்டு ரூ.66 இலட்சம்மதிப்பீட்டில், பணிகள் துவக்கப்பட்டு, 1.7.1973 அன்றுமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால்திறந்து வைக்கப்பட்டது.

இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம். மேலும் இந்தியாவிலேயே மூன்றாவதா கட்டப்பட்ட மேம்பாலம் ஆகும். ஜெமினி ஸ்டூடியோ இங்கு அமைந்திருந்ததால்,  ஜெமினி மேம்பாலம் எனஅழைக்கப்பட்டது.  இந்த மேம்பாலத்தின் பெயரை அண்ணாவின் நினைவாக கலைஞர் அவர்கள் அண்ணாமேம்பாலம் என பெயரிட்டார்கள்.  1974 ஆம் ஆண்டில்,குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும்வகையில் குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலைஅமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ20,000 வாகனங்கள் இப்பாலத்தின் வழியே செல்கின்றன.

இப்பாலம்  CRIDP 2021-2022 திட்டத்தின்கீழ் ரூ.8.85 கோடி மதிப்பீட்டில், சீரமைக்கும் பணிகள், இப்பாலத்தின்தூண்களை GRC பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்புசெய்யவும், இப்பாலத்தின் கீழே பொலிவூட்டும் வகையில்பசுமை செடி வகைகள் அமைக்கவும், பொது மக்கள் நடந்துசெல்ல ஏதுவாக நடைபாதைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் திரு...வேலு அவர்கள் ஆய்வு செய்து,   இப்பணியினை வரும் மார்ச் 2023க்குள் முடிக்கஅதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.