சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார்.

சென்னை பெருநக காவலில் பணிபுரியும் காவலர்முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள்மற்றும் ஆளிநர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கானதொகையினை தமிழ்நாடு காவலர் சேம நலநிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 ஆய்வாளர், 1 உதவி ஆய்வாளர், 1அமைச்சுப்பணியாளர் உட்பட 19 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலருக்கு தமிழ்நாடு காவலர்சேமநல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) மொத்தம் ரூ.43,70,588/- ஒதுக்கீடுசெய்யப்பட்டது.**************

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், இன்று(20.12.2022) காவல் ஆணையாளர் அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்படி மருத்துவ சிகிச்சைதொகை ஒதுக்கீடு பெற்ற 19 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவசிகிச்சை தொகைக்கான வரைவோலையைவழங்கினார். இதில் இறந்துபோன ஆயுதப்படைதலைமைக் காவலர் மற்றும் போக்குவரத்து தலைமைக்காவலர் ஆகியோரின் குடும்பத்தினர், ஒதுக்கீடுசெய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கானதொகைக்கான வரைவோலையினை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல்கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்J.லோகநாதன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர்(தலைமையிடம்) திருமதி .B.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப.,மற்றும் காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.M.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.