கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் விதமாக பிரதமரின்மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்படி மீன் குஞ்சுகள்மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும்பணியை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம்மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் திரு. தமிழ்மணிதலைமையில் 3.1 மில்லியன் பச்சை வரி இறால்கள்மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன.கடந்த 2022 பிப்ரவரி திட்டம் தொடங்கப்பட்டதில்இருந்து தற்போது வரை 36.54 மில்லியன் பச்சை வரிஇறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும்பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைமீன்வளத்தை அதிகரிக்கும் என்பதால், மத்திய மீன்வளஆராய்ச்சி மையத்திற்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.