பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (20.12.2022) தொடங்கி வைத்தார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியுதவியுடன் சேப்பாக்கம் நடுக்குப்பத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டதால், சேப்பாக்கம் நடுக்குப்பம் 1 முதல் 8 தெருக்கள் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருவில் உள்ள சுமார் 3000 மக்கள் பயன் பெறுவார்கள். 

இத்திட்டப் பணிகளின் மூலம் சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைத்தல் மற்றும் 230 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.  மேலும், பழைய கழிவுநீர் அமைப்பினை இணைக்கும் பணிகளும், 370 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணிகளும் நடைபெறும். 

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள், சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.